திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து தூக்கப்பட்ட நடிகை.. குத்தாட்டம் போட்டு கும்மாளம் போட்ட நம்பர் நடிகை

பல வருடங்களாக சினிமாவில் கொடிகட்டி பறப்பவர் அந்த பிரபல நடிகை. அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்டு வந்தார்.

அவருக்குப்பின் நடிக்க வந்த நடிகைகள் எல்லாம் இப்போது குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் இவர் மட்டும் இன்னும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஏனென்றால் இந்த சின்ன நம்பர் நடிகை போட்டியாக பார்ப்பது லேடி சூப்பர் ஸ்டாரான பெரிய நம்பர் நடிகையை தான்.

இந்நிலையில் நடிகை தற்போது பயங்கர குஷியில் இருக்கிறார். அதற்கு காரணம் சமீபத்தில் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டாரும், அவருடைய மகனும் இணைந்து நடித்த திரைப்படம் வெளியானது. அதில் அப்பா நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமானார் அகர்வால் நடிகை.

அவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் இடையில் கர்ப்பம் தரித்த நடிகையால் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாமல் போனது. எடுத்தவரை போதும் அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் நடிகையின் ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. இது சம்பந்தப்பட்ட நடிகைக்கு வருத்தமாக இருக்கிறதோ, இல்லையோ இந்த சின்ன நம்பர் நடிகைக்கு ரொம்பவே சந்தோஷமாம்.

அப்படி என்னதான் விஷயம் என்று விசாரித்ததில் அந்த படத்தில் அப்பா நடிகருக்கு ஜோடியாக முதலில் ஒப்பந்தமானவர் இந்தச் சின்ன நம்பர் நடிகை தான். ஆனால் சில பல காரணங்களால் இவருக்கு பதில் ஒப்பந்தமானார் அகர்வால் நடிகை. தற்போது அவருடைய காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டது தான் நடிகையின் இந்த கொண்டாட்டத்திற்கு காரணமென்று திரையுலகில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News