வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மாமி நடிகையின் தீராத ஆசை.. மாஸ் ஹீரோவுக்காக நடக்கும் போட்டி

மாஸ் ஹீரோ புது அவதாரம் எடுத்ததில் பல பேருக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. அதிலும் டாப் ஹீரோ உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

அதேபோல் வெளிச்ச நடிகரும் அந்த இடத்தை சொந்தமாக்க பிளான் போட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் நடித்த நான்கு நடிகைகளுக்குள் மிகப்பெரும் போட்டி நடக்கிறதாம்.

இது அவருடைய கடைசி படம் என்பதாலேயே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் ஹீரோயின் யார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அதன்படி தற்போது மாமி நடிகையும் விவாகரத்து நடிகையும் தான் செம போட்டியில் இருக்கிறார்களாம். ஆனால் மாஸ் ஹீரோ இவர்களுடன் இணைந்து ஏகப்பட்ட படத்தில் நடித்து விட்டார்.

அதனால் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகையை தேர்வு செய்யலாம் என பட குழு முடிவெடுத்துள்ளதாம். அதன்படி கன்னகுழி நடிகையிடம் சத்தம் இல்லாமல் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

மேலும் ஏழு எழுத்து நடிகையிடமும் பேசி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தான் ஹீரோவுடன் ஜோடி போட இருக்கிறார்கள். ஆனால் மாமி நடிகை இடத்தை பிடிக்க காய் நகர்த்தி வருகிறாராம்.

ஆனால் ஹீரோ டிக் செய்பவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். இதில் விவாகரத்து நடிகைக்கு வாய்ப்பு குறைவு தான்.

Trending News