திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

பேரு கெட்டு போயும் அழிச்சாட்டியம் குறையல.. தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்கும் சச்சை ராணி

Gossip: சர்ச்சைகளின் ராணியாக வலம் வரும் நம்பர் நடிகை அடுத்த பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார். ஏற்கனவே ஒல்லி நடிகருடன் இருந்த பிரச்சனையை ஊருக்கே தெரியவைத்து பேரை டேமேஜ் செய்து கொண்டார்.

அதன் பிறகு நடிகை எது செய்தாலும் பஞ்சாயத்து தான். திமிர் பிடித்தவர் வன்ம குடோன் என இவரை நெட்டிசன்கள் ஒரு பக்கம் திட்டி தீர்க்கின்றனர்.

ஆனால் நடிகையோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் கெத்தை காட்ட வேண்டும் என சில பல வேலைகளை பார்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த விழாவில் கூட தாமதமாக போய் பிரச்சனையில் சிக்கினார்.

பேரு கெட்டு போயும் அழிச்சாட்டியம் குறையல

எல்லாமே நடிகை திட்டம் போட்டு செய்வது தான். எல்லோரும் நமக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எங்க இருந்தாலும் நம்ம தான் நம்பர் ஒன் என இப்படி செய்கிறார்.

அப்படித்தான் இவருடைய கணவர் எடுத்து வரும் படத்தை இவர் வேறு ஒருவருடன் சேர்ந்து தயாரிக்கிறார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட கை மீறி விட்டதாம்.

அதனால் நடிகை தரப்பு பார்ட்னர் தயாரிப்பாளரிடம் மேற்கொண்டு காசு கேட்டிருக்கிறார்கள். இதனால் கொந்தளித்து போன அவர் இதுவரைக்கும் நான் போட்ட பணத்தை கொடுத்துட்டு மொத்தமா படத்தை நீங்களே எடுத்து முடிங்க என சொல்லிவிட்டாராம்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன நடிகை தற்போது நடித்துவரும் படத்தின் தயாரிப்பாளரிடம் அதிக சம்பளம் சொல்லி செக் வைத்திருக்கிறார். இப்படி அவருடைய அழிச்சாட்டியம் அதிகமாக்கிக் கொண்டே போவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Trending News