வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: 6 அடி வில்லன் நடிகர் மேல் வந்த காதல்.. திருமணமே செய்யாமல் தனிமையில் வாழும் 50 வயது நடிகை

Gossip: திரையுலகில் ஒன்று இரண்டு படங்களில் சேர்ந்து நடித்து விட்டாலே அந்த ஜோடிக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்படி திருமணத்தில் இணைந்த தம்பதிகளும் இருக்கின்றனர்.

ஒருவேளை அந்த காதல் கை கூடவில்லை என்றால் வேறு வாழ்க்கையில் செட்டில் ஆகும் நடிகைகளும் உண்டு. ஆனால் ஹோம்லி நடிகை ஒருவர் காதல் தோல்வியால் 50 வயதிலும் திருமணமே செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய துரு துரு நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதேபோல் அண்ணி, தங்கை, அம்மா போன்ற கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் இவர் ஆறு அடி வில்லன் நடிகருடன் இணைந்து நடித்த போது அவர் மேல் காதல் வயப்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த நடிகர் மற்றொரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார்.

இதனால் ஹோம்லி நடிகையின் காதலை அவர் கண்ணியத்துடன் மறுத்து இருக்கிறார். இதுதான் நடிகை இன்று வரை சிங்கிளாக இருப்பதற்கு காரணமாம்.

அதை அடுத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய நடிகை இப்போது சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் திருமணமான வேகத்திலேயே விவாகரத்து வரை செல்கிறார்கள். அதில் இந்த நடிகையின் காதல் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Trending News