வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சர்ச்சையில் சிக்கி காணாமல் போன நடிகை.. 48 வயதிலும் திருமணத்திற்கு ஏங்கும் பரிதாபம்

Gossip: முதல் படத்திலிருந்து டாப் ஹீரோவுடன் அறிமுகமானவர்தான் அந்த நடிகை அடுத்தடுத்து வாய்ப்புகள் அவரை தேடி வந்த நிலையில் கோலிவுட் பக்கமும் தலையை காட்டினார்.

பிரம்மாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். டான்ஸ் நடிகருடன் சில படங்களில் நடித்திருக்கும் அவர் கட்டுமஸ்தான நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டினார்.

அது ரகசிய குடித்தனம் நடத்தும் அளவுக்கு சென்றது. நடிகை மேல் இருந்தால் மயக்கத்தில் அந்த ஹீரோவும் காசை வாரி இறைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர்.

சர்ச்சைகளின் ராணியாக வலம் வந்த ஹீரோயின்

இதனால் நடிகர் கோடிக்கணக்கில் சொத்துக்களை இழந்து தவித்தது இப்போதும் கூட கிசு கிசுவாக பேசப்படுகிறது. அதை அடுத்து விளையாட்டு பிரபலத்துடன் நெருக்கம் காட்டினார் அந்த நடிகை. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்பட்டது.

ஆனால் அதுவும் கிசுகிசுவாக முடிந்த நிலையில் நிழல் உலகா தாதாவுடன் கூட நடிகைக்கு தொடர்பு இருந்ததாக காத்துவாக்கில் பேசப்பட்டது. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஒரு கட்டத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகினார்.

தற்போது நடிகைக்கு 48 வயதாகி விட்டது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. யாராவது கேட்டால் குழந்தை குட்டி என வாழ எனக்கும் ஆசைதான். ஆனால் அதற்கான நேரம் வரவில்லை என ஏக்கத்தோடு சொல்கிறாராம். இதற்குப் பிறகாவது நடிகைக்கு திருமணம் கைகூடுமா என பார்ப்போம்.

திருமணத்திற்காக ஏங்கி தவிக்கும் நடிகை

Trending News