புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கண்ட்ரோல் பண்ணா விவாகரத்து தான்.. காதல் கணவரை மிரட்டி காரியத்தை சாதித்த நடிகை

Gossip: ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய பல தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ்வது கிடையாது. அரிதிலும் அரிதாக சில ஜோடிகள் தான் குடும்பம் குழந்தை என இருக்கின்றனர்.

அப்படி நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ஒரு ஜோடிக்குள் இப்போது விரிசல் விழுந்துள்ளதாம். பாரம்பரிய குடும்பத்து பிள்ளையான அந்த நடிகர் கட்டினால் அந்த பொண்ணை தான் காட்டுவேன் என அடம்பிடித்து கல்யாணம் செய்தார்.

நடிகையும் நல்ல பிள்ளையாக திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது போல் சில வருடங்களிலேயே அவருக்கு நடிக்கும் ஆர்வம் வந்தது.

காத்திருந்து காய் நகர்த்திய ஹீரோயின்

கணவர் வீட்டில் மறுப்பு தெரிவித்த போதும் கூட அடம்பிடித்து நடிக்க வந்தார். ஆரம்பத்தில் கதையின் நாயகியாக நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்போது அம்மணி கணவருடன் சொந்த மாநிலத்துக்கே சென்றுவிட்டார்.

அங்கு போனதும் கிளாமர் உடை அணிவது பார்ட்டி என பழைய வாழ்க்கைக்கு திரும்பி வருகிறாராம். அதிலும் சர்ச்சையான கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயார் என சொல்வது போல் அவருடைய உடை நாகரிகம் சமீப காலமாக இருந்து வருகிறது.

இது கணவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஏதாவது கேள்வி கேட்டால் கூட என்னை கட்டுப்படுத்தினால் விவாகரத்து செய்வேன் என அதிரடியாக பேசுகிறாராம். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது இது என்ன புது தொல்லையா போச்சு என நடிகரும் அமைதியாக இருக்கிறாராம்.

பொது இடங்களுக்கு இருவரும் சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் ஆளுக்கொரு திசையில் தான் இருக்கிறார்களாம். நடிகை நல்ல பிள்ளையாக நடித்து காத்திருந்து காலை வாரி விட்டு விட்டாரே என்ற பேச்சு இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

காதல் கணவரை மிரட்டும் நடிகை

Trending News