செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நம்பி நடிச்சதுக்கு வச்சு செய்த சங்கர்.. அங்கவை சங்கவை அப்பாவிற்கு நடந்த ஏமாற்றம்

சினிமாவில் கமர்சியல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் தான் இயக்குனர் சங்கர். இவர் பிரபல இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். அப்படியாக இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த பிரபலத்தை இயக்குனர் சங்கர் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் சிறிய நகைச்சுவை காட்சியில் அந்தப் பிரபலம் நடித்துள்ளார். அதிலும் இலக்கியம் சார்ந்த பெயர்களை இழிவுப்படுத்தும் வகையில் அந்த காட்சியானது அமைந்துள்ளது. தமிழ் பற்றுள்ள நீங்களே இது போன்ற காட்சிகளில் நடிக்கலாமா என்று இலக்கியவாதிகள் அந்த பிரபலத்தை வறுத்தெடுத்து விட்டனர்.

Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

இந்நிலையில் தனது கருத்துக்கள் நிறைந்த பேச்சுக்களின் மூலம் அரங்கத்தையே அதிர வைக்கக் கூடியவர் தான் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவரின் ஆற்றல் மிகுந்த பேச்சினை கேட்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவாஜி. இதில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அங்கவை, சங்கவை என்னும் இரட்டை பெண்களுக்கு தந்தையாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் படத்தில் ஹீரோவிற்கு பெண்பார்க்க செல்லும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இவர் நடித்திருக்கும் நகைச்சுவை காட்சியானது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாக இருந்து வருகிறது.

Also Read: வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

அதிலும் இந்த அங்கவை, சங்கவை என இரண்டு பெண்களுமே கருப்பான தோற்றத்தில் நடித்துள்ளனர். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினார் சாலமன். ஆனால் நிறங்களை வைத்து யாரையும் அசிங்கப்படுத்த மாட்டோம் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இலக்கியத்தில் வரக்கூடிய பாரி உடைய மகள்கள் தான் இவர்கள் என கூறி நடிக்க வைத்தார் சங்கர். இதனை நம்பி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் சாலமன் பாப்பையா.

ஆனால் அதற்கு எதிர் மாறாக படம் வெளியானதற்கு பின்னரே இரட்டையர்களான இலக்கிய பெயர் கொண்ட பெண்களை, சங்கர் அவமானப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கான நியாயத்தை படம் வெளியானதற்கு பின் கேட்க முடியாது என்று மன வருத்தப்பட்டு அதனை அப்படியே விட்டு விட்டார். இதனால் மனம் உடைந்த இவர் அடுத்து வந்த பட வாய்ப்புகளில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இதனை பட்டிமன்ற பேச்சாளராக இருக்கக்கூடிய ராஜா ஒரு பேட்டியில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராஜமவுலி கிட்ட நெருங்க கூட முடியாத சங்கர்.. இன்று வரை இருக்கும் பெரிய ஏக்கம்

Trending News