வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவர்ச்சி நடிகைக்கு அழைப்பு விடுத்த பிக்பாஸ்.. டிஆர்பிக்காக செய்யும் தரைலோக்கல் வேலை

சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களை கவர்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னணியில் இருக்கும் சேனல்கள் தங்கள் டிஆர்பிக்காக பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இருப்பினும் விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசனங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பியும் எக்கசக்கமாக எகிறியது.

Also read:40 வயதிலும் படுமோசமாக வந்த கிரண்.. போதும் ரொம்ப திகட்டுது அம்மணி

அதன் காரணமாகவே விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபர்களை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறது. அதன் அடிப்படையில் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கிரணிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தமிழில் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த அவருக்கு சமீப காலமாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

Also read:சீண்டி விட்ட சக்காளத்தி.. சரியான பிளான் போட்டு வலைவீசும் கதிர்

அவருடைய படுமோசமான கிளாமர் போட்டோக்கள் சில எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து அது போன்ற போட்டோக்களை வெளியிட்டு வருவதை தான் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கிரண் சம்மதித்து விட்டாராம்.

பெரிய திரையில் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கிரண் தற்போது சாமர்த்தியமாக யோசித்து சின்னத்திரை பக்கம் திரும்பி உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆகிவிடலாம். அதனால் தான் கிரண் விஜய் டிவியின் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டாராம். அது மட்டுமல்லாமல் கமலுடன் அன்பே சிவம் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் அதன் காரணமாகவும் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Also read:கவர்ச்சி நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் ஷிவானி.. ரசிகர்களை ஏங்க விட்ட ஹாட் புகைப்படம்

Trending News