ஹீரோக்களுக்கு இணையாக பல திரைப்படங்களில் கலக்கி வரும் நம்பர் நடிகை தற்போது சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இதை நன்றாகப் புரிந்துகொண்ட நம்பர் நடிகை தற்போது தன்னுடைய சேமிப்பை பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.
ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை தற்போது புது பிரச்சனை ஒன்றில் சிக்கி தவித்து வருகிறார். அதாவது நடிகை தன் காதலருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இது பிடிக்காத சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நடிகைக்கு பல குடைச்சல் கொடுத்து வருவதாக தெரிகிறது. அதனால்தான் சமீபகாலமாக நடிகையைப் பற்றி பல அவதூறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நடிகை பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய ஒரு பட வாய்ப்பை தட்டி பறித்தது தான்.
அதனால் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் நடிகையை சினிமாவில் இருந்து ஓரம்கட்ட தற்போது பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நடிகைக்கு கிடைக்க இருக்கும் சில பெரிய படங்களையும் அந்த நிறுவனம் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தச் செய்தி தற்போது நம்பர் நடிகையின் காதுக்கும் எட்டியுள்ளது. இதைக்கேட்டு பதட்டம் அடையவேண்டிய நடிகையோ மிகவும் கூலாக தொழில் போட்டி எல்லா இடத்திலேயும் தான் இருக்கும், அதனால் ஒரு கை பார்த்து விடலாம் என்று கூறுகிறாராம்.
பல அதிரடியான விஷயங்களை மிகவும் ஈஸியாக செய்வதில் நடிகை ரொம்பவும் கில்லாடி. அதுமட்டுமில்லாமல் காதலன் தற்போது இயக்கத்திலும், தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அதனால் அவருக்கு எத்தனை தொல்லைகள் வந்தாலும் அவர் ஈசியாக சமாளித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று திரையுலகில் நடிகையை பற்றி பேசி வருகின்றனர்.