வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய் படமா இருந்தாலும் எங்களுக்கு வேணாம்.. பேராசையால் திக்கு தெரியாமல் தவிக்கும் GOAT

GOAT: விஜய், வெங்கட் பிரபுவின் GOAT தான் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஒரு பக்கம், விஜய்யின் இளமையான கெட்டப் ஒரு பக்கம் என இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பேராசை பெருநஷ்டம் என்ற கதையாக பட குழுவினர் தற்போது ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். அதாவது முக்கிய நடிகர்களின் படங்களை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்களுக்குள் பலத்த போட்டியே நடைபெற்று வருகிறது.

இதில் நெட்ஃப்ளிக்ஸ் முதல் ஆளாக வந்து டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி விடுகிறது. அதன்படி முதலில் GOAT படத்தை வாங்குவதற்காக இவர்கள் தயாரிப்பு தரப்பை அணுகி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதிக விலைக்கு கேட்டதால் நெட்ஃப்ளிக்ஸ் இப்படத்தை வாங்கவில்லை.

Also read: விஜய்யை இயக்கும் அந்த கருப்பு ஆடு யார்? பிஜேபி-யின் B டீம் தான் தளபதி என்று அடித்து சொல்லப்படும் உண்மைகள்

அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியாக போகும் முக்கிய படங்களை எல்லாம் அவர்கள் வாங்கிவிட்டனர். இதைப் பார்த்த GOAT படக்குழு நீங்கள் சொன்ன விலைக்கு படத்தை தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தை அணுகி இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இந்த வருஷத்திற்கான படங்களை எல்லாம் நாங்கள் வாங்கி விட்டோம். அதனால் விஜய் படமாக இருந்தாலும் கூட எங்களுக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்களாம். இதனால் அதிர்ந்து போன படகுழு இப்போது என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

மேலும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் அமேசான் பிரைம் தளத்தை பட குழு நாடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் கேட்கும் விலைக்கு தான் படத்தை கொடுத்தாக வேண்டும். இப்படி பேராசைப்பட்டு திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது GOAT.

Also read: விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

Trending News