திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இன்னும் எதையெல்லாம் பாக்கணுமோ தெரியலையே.. அடங்காத மகளால் அவமானப்படும் இயக்குனர்

Gossip: நம்பர் ஒன் இயக்குனராக கொடிக்கட்டி பறக்கும் அந்த பிரபலம் தற்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போய் இருக்கிறாராம். சினிமாவை தாண்டி குடும்பத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அந்த இயக்குனர்.

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அழகு பார்த்த அவருக்கு தன் மகள்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதேபோல் மூத்த மகளுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைத்தார்.

ஆனால் அது சில மாதங்கள் கூட நீடிக்காத நிலையில் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டார். அதேபோல் இளைய மகளையும் கரை சேர்த்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.

கேலி கிண்டலுக்கு ஆளாகும் நடிகை

ஆனால் மகளோ நடிக்கத்தான் போவேன் என அடம்பிடித்து ஹீரோயினாக மாறினார். ஆரம்பத்தில் அவரை ரசித்த ரசிகர்கள் இப்போது அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அம்மணியின் வாய் துடுக்கான பேச்சு தான்.

அதேபோல் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இவர் செய்த ஒரு விஷயம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. எப்படிப்பட்ட இயக்குனருக்கு இப்படி ஒரு மகளாக என பலரும் கழுவி ஊற்றாத குறையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்து தான் அந்த இயக்குனர் மகளை படித்த படிப்புக்கு வேலை பார் என்று சொன்னார். ஆனால் அடங்காத மகள் தற்போது சோசியல் மீடியா கிண்டல்களால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறாராம்.

மகளால் நொந்து போன பிரம்மாண்ட இயக்குனர்

Trending News