ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லிக்கு போட்டியா படம் எடுக்க எனக்கும் தெரியும்.. ஒரு நாளைக்கு ஒரு கோடி காலி பண்ணும் ஹீரோ

Director Atlee: ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றி அட்லியை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதனாலேயே அவருடைய அடுத்த பட அறிவிப்பை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதன்படி தற்போது அவர் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. பொதுவாகவே அட்லி வஞ்சனை இல்லாமல் அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பார்.

தயாரிப்பாளர்களும் காசை தண்ணியாகத் தான் செலவு செய்வார்கள். ஆனால் இப்போது அவருக்கே சவால் விடும் அளவுக்கு பிரித்விராஜ் ஒரு படத்தை எடுத்து வருகிறாராம்.

அட்லிக்கு சவால் விடும் பிரித்விராஜ்

சமீபத்தில் இவருடைய ஆடு ஜீவிதம் மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தியது. அதை தொடர்ந்து தற்போது இவர் மோகன்லாலை வைத்து எம்புரான் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் ஒரு நாள் பட்ஜெட் மட்டுமே ஒரு கோடி ஆகும். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம்.

ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கோடி காலி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. அது மட்டுமின்றி மொத்த ஈரான் நாட்டையே செட்டாக போட்டு காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

அப்படி என்றால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு எகிறும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். அஜித்தின் விடாமுயற்சிக்கு கூட ஒரு நாளைக்கு 50 லட்சம் செலவாகிறது. அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் பிரித்விராஜ்.

Trending News