ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இருக்கிற பிரச்சினையில இது வேறயா.. மூன்று எழுத்து நடிகரால் டென்ஷனில் மாஸ் பிரபலம்

Gossip: ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத அந்த நடிகர் தற்போது மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார். அவருடைய படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கின்றது.

அதை அப்படியே பிடித்துக் கொண்ட அந்த ஹீரோவும் தற்போது பிரபல நடிகரின் இடத்தை அடைய திட்டம் போட்டு இருக்கிறார். ஆனால் அந்த கேப்பில் வளர்ந்து வரும் மூன்றெழுத்து ஹீரோ இவருக்கு போட்டியாக வந்து நிற்கிறார்.

இருவரின் ஆரம்பமும் ஒரே இடத்தில் தான். அதனாலேயே இவர்களுக்குள் தொழில் ரீதியான போட்டி தற்போது அதிகரித்து விட்டதாக கூறுகின்றனர். மாஸ் பிரபலம் தற்போது வெளியாக இருக்கும் அந்த படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார்.

மூன்றெழுத்து நடிகரின் அசுர வளர்ச்சி

எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம் சில தடங்கல்களால் பண்டிகை நாளை முற்றுகையிட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் மூன்றெழுத்து ஹீரோவின் படமும் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படத்திற்கு மேல் சம அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனாலும் மாஸ் ஹீரோ தற்போது கலக்கத்தில் இருக்கிறாராம். தன்னுடைய படம் ஒரு வேளை சரியாக போகவில்லை என்றால் மூன்றெழுத்து ஹீரோ ஓவர்டேக் செய்து விடுவார்.

இருக்கிற பிரச்சனையில் இத வேற சமாளிக்கணுமா என தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறாராம். தற்போது திரையுலகிலும் இந்த இருவரில் யார் ரேசில் ஜெயிக்கப் போகிறார்கள் என வில்லங்கத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Trending News