வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இயக்குனர் மீது செம கடுப்பில் இருக்கும் நம்பர் நடிகை.. அம்பேலான பாலிவுட் கனவு

சினிமாவுக்கு வந்த மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் சேர்ந்தவர் அந்த இயக்குனர். காப்பி இயக்குனர் என்ற பெயர் இருந்தாலும் இவர் இயக்கிய முதல் படமே தாறுமாறாக ஹிட்டடித்தது.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இந்தத் தொடர் வெற்றியால் இயக்குனர் தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளார்.

அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகருக்கு படம் இயக்க அக்ரிமெண்ட் போட்டார் இயக்குனர். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் சிறிது தாமதம் ஆனது. அதுபோக நடிகரின் மகனும் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டார்.

அதனால் நடிகர் அந்த மன உளைச்சலில் இந்த படத்தை பற்றிய நினைவே இல்லாமல் இருந்திருக்கிறார். படத்தை எப்போது தொடங்கலாம் என்று காத்திருந்த இயக்குனருக்கு ஹீரோவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே இயக்குனர் உச்சகட்ட மன வருத்தத்தில் இருக்கிறார்.

வேறு வழியில்லாமல் இயக்குனரே ஹீரோவுக்கு போன் போட்டு படம் தொடங்குவது பற்றி பேசியிருக்கிறார். ஆனால் அந்த ஹீரோவோ இப்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு சொல்கிறேன் என்று நாசுக்காக கட் பண்ணி விட்டாராம்.

இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தது இயக்குநர் மட்டுமல்ல படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்ட நம்பர் நடிகையும் தான். தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த அவரை இயக்குனர் தான் பாலிவுட்டில் அறிமுகமானால் வேற லெவலுக்கு செல்லலாம் என்று சம்மதிக்க வைத்துள்ளார்.

அதை நம்பி பாலிவுட்டில் களமிறங்க ஆசைப்பட்ட நடிகைக்கு தற்போது அந்தக் கனவு கனவாகவே போய்விட்டது. இதனால் நம்பர் நடிகை இயக்குனரின் மீது தற்போது செம கோபத்தில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்துவதற்காக இயக்குனர் போன் செய்தால் கூட நடிகை எடுப்பதே கிடையாதாம்.

- Advertisement -spot_img

Trending News