Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுசுக்கு ஜோடியாகும் சர்ச்சை பட நாயகி.. குபேராவுக்குப் பிறகு பாலிவுட் பறக்கும் ராயன்

தனுசுக்கு ஜோடியாகும் சர்ச்சை பட நாயகி.. குபேராவுக்குப் பிறகு பாலிவுட் பறக்கும் ராயன்

Dhanush: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவருடைய ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடித்து வரும் […]

Dhanush: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவருடைய ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடித்து வரும் நிலையில் தனுஷ் குபேரா படத்தில் பிஸியாக இருக்கிறார். நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படத்திற்கு பிறகு அவர் பாலிவுட் பறக்க இருக்கிறார்.

ஏற்கனவே இவர் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அத்ரங்கி ரே வெளிவந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடிக்கிறார்.

தனுசுக்கு ஜோடியாகும் நடிகை

இதற்கான அறிவிப்பு வீடியோ கடந்த வருடம் வெளிவந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அனிமல் பட நாயகி திரிப்தி டிம்ரி நடிக்கிறார்.

முழுக்க முழுக்க காதல் கதையான இப்படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹிந்தியில் முன்னணி நாயகியாக இருக்கும் இவர் இப்படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் தலையை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக மொத்தம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் ஹிந்தி படத்தை முடித்துவிட்டு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்து வட சென்னை 2, புதுப்பேட்டை 2 என அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.