புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜிவி பிரகாஷின் சொத்துக்களை ஆட்டையை போட்ட சைந்தவி.. அதிர வைக்கும் பத்திரிக்கையாளர்

G.V.Prakash-Saindhavi: லவ் பண்ணும் போது இருக்குற காதல் கல்யாணம் பண்ணதும் காணாமல் போச்சு. இதை திரை பிரபலங்களின் வாழ்க்கை மூலம் கண்கூடாக பார்க்கிறோம். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

அதில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய விவாகரத்து செய்தி என்றால் அது ஜிவி பிரகாஷ், சைந்தவி மணமுறிவு தான். பள்ளி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்த இவர்கள் தற்போது பத்து வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அனைவரின் குற்றச்சாட்டும் ஜிவி பிரகாஷ் பக்கம் தான். பல நடிகைகளுடன் அவர் நெருங்கிய நட்பில் இருந்ததாகவும் அதுவே குடும்பத்தில் பிரச்சனை என்றும் பலபேர் பலவிதமாக விமர்சிக்கின்றனர்.

அதில் பத்திரிக்கையாளர் உமாபதி சைந்தவி மீது ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் திருப்பி இருக்கிறார். அதாவது ஒருவர் பிரபலமாக இருக்கும்போது அவரை வைத்து சொகுசாக வாழ்ந்து விட்டு இப்போது பிரிந்து போவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஜிவி பிரகாஷை யூஸ் செய்த சைந்தவி

இத்தனை வருடங்கள் கழித்து உனக்கு சுதந்திரம் இல்லை என்று சொன்னால் எப்படி. ஆரம்பத்திலேயே என்னுடைய சுதந்திரம் இதுதான் என்று சொல்லி இருக்க வேண்டும் என சைந்தவியை தாறுமாறாக விமர்சித்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷை விட்டு பிரிந்து வரும்போது அவர் பல சொத்துக்களை ஆட்டையை போட்டு தான் வந்திருக்கிறார். அவருடன் இருந்த போதும் அவருடைய பணத்தை நன்றாக அனுபவித்திருக்கிறார்.

பல பேட்டிகளில் தன் காதலை பற்றி சைந்தவி குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வளவு லவ் இருக்கிற நீ எதற்காக பணம் வாங்க வேண்டும் என கண்டபடி விமர்சித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விவாகரத்து ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். அதை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என பத்திரிகையாளரை திட்டி தீர்க்கின்றனர். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் டியர் வெளியானது.

அதை அடுத்து இடிமுழக்கம், கிங்ஸ்டன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. தற்போது இதில் கவனம் செலுத்தி வரும் அவர் விவாகரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து சர்ச்சை

Trending News