இனிம இந்த மாதிரி படத்துல நடிக்க கூடாது.. சீனியர் நடிகையின் புலம்பல்

gossip
gossip

Gossip: ஒரு காலத்தில் கனவு கன்னியாக முன்னணி இடத்தில் இருந்தவர் தான் அந்த நடிகை. கண்ணழகியான இவர் இப்போது வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

ஆனால் அங்கு இவருக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் அவர் இருக்கிறார். இப்போது புதுமுக ஹீரோ ஹீரோயின்களுக்கு கூட கேரவன் வசதி செய்து தரப்படுகிறது.

கொஞ்சம் வளர்ந்து வரும் நடிகராக இருந்தால் தாங்கள் கேட்ட கேரவன் இல்லை என்றால் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு கூட சிலர் செல்கின்றனர்.

அப்படி இருக்கும் சூழலில் இந்த சீனியர் நடிகைக்கு படப்பிடிப்பில் கேரவன் வழங்கப்படவில்லையாம். அது மட்டும் இன்றி வந்து போகும் செலவு கூட அவர்தான் செய்ய வேண்டும் என தயாரிப்பு தரப்பில் சொல்லி விட்டார்களாம்.

சீனியர் நடிகையின் புலம்பல்

இயக்குனர் ரொம்பவும் கேட்டுக் கொண்டதால் தான் கண்ணழகி இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். ஆனால் தயாரிப்பு தரப்பு அவரை டென்ஷன் செய்து விட்டதாம்.

அதுபோக படப்பிடிப்பு தளத்தில் கூட சீனியர் நடிகைக்கு எதிர்பார்த்த மரியாதை இல்லை. இதனால் கடுப்பான அவர் இனிமேல் இது போன்ற சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்திருக்கிறார்.

அதேபோல் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாத்தையும் பேசி சரிப்பட்டு வந்தால் மட்டுமே டேட் கொடுக்க வேண்டும் என அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

Advertisement Amazon Prime Banner