சினிமா துறையை பொறுத்தவரை பிரபலமாக இருக்கும் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்து விடும். அது நடிகராக இருந்தாலும் சரி, பாடகராக இருந்தாலும் சரி அனைவருக்கும் இது பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் பிரபல பாடகர் ஒருவரின் மகனும் இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பு, தயாரிப்பு என்று பல துறைகளிலும் கலக்கி வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். தன்னுடைய அருமையான குரல் வளத்தால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் இவர் இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு திறமையான கலைஞரின் மகனான எஸ் பி பி சரணுக்கு தற்போது சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையாம்.
தன் அப்பாவை போன்றே திறமையாக பாடும் இவர் தமிழ், தெலுங்கு உட்பட பழமொழிகளில் பாடல்களை பாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சென்னை 28 உள்ளிட்ட சில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் தனக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்காதது பற்றி கூறியிருக்கிறார். என்னால் பாட முடியாது என்று நான் யாரிடமும் கூறியது கிடையாது. ஆனால் இப்போது எனக்கு எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போது நான் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்து வருகிறேன். விரைவில் அப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் நான் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவருக்கு பாட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மிகப்பெரிய பாடகரின் மகனான இவர் தற்போது பாட வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருப்பது பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.