சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்த பிரபல தொகுப்பாளினி. ஹீரோயின்களுக்கு இணையான அவரின் அழகும், துருதுரு பேச்சும் அவரை ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாற்றியது.
இதனால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். அதோடு பெரிய திரையிலும் அவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று அவர் ஒரேயடியாக அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக மாறினார். இப்படி பிரபலமாக இருக்கும் போதே சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்த இளம் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது அவரின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருமணத்திற்கு பிறகு சிலகாலம் மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு மீண்டும் மீடியாவுக்கு திரும்பி வந்தார். நீண்ட காலம் கழித்து அவரை பார்த்த ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் முன்பை விட அவர் இன்னும் இளமையாக மாறி ரசிகர்களை கிறங்கடித்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஓவர் கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அவரை ஹோம்லியாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த அதிரடியான கவர்ச்சி ஆட்டம் வியப்பாக இருந்தது.
ஆனாலும் ரசிகர்கள் அவர்கள் அவரை ரசிக்கவே செய்தனர். ஆனால் ஒரு சிலரோ அவரின் இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்து அடுத்த டைவர்ஸ் உங்களுக்குத்தான் என்று வெளிப்படையாகவே கூறினர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து தன்னுடைய கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இலைமறை காயாக கவர்ச்சி காட்டி வந்த தொகுப்பாளினி தற்போது படுமோசமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். வயது ஏற ஏற அவருடைய உடையும் மோசமாக மாறி வருகிறது. சமீபகாலமாக அவர் பாதிக்கு மேல் உடலை காட்டியபடி தாராளமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
குழந்தை குட்டி வந்த பின்னும் இப்படி கவர்ச்சி காட்டுவது என்பது போன்ற பதிவுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக தான் அந்த தொகுப்பாளினி இதுபோன்று போட்டோக்களை பதிவிடுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.