வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Por Movie Review – அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இடையே வெடிக்கும் ஈகோ.. போர் முழு விமர்சனம் இதோ!

Por Movie Review : பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜ், டிஜே பானு, மெர்வின் ரொசாரியோ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் போர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

இந்தியில் வெளியான டாங்கோ என்ற படத்தின் தழுவலாகத்தான் போர் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் கதை இரண்டு நெருங்கிய நண்பர்கள் ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது தங்கள் கல்லூரிக்காக மாணவர்கள் இடையே வெடிக்கும் ஈகோ பிரச்சனையை இந்த படம் வெளிப்படுத்தி இருக்கிறது.

Also Read : டாம் அண்ட் ஜெரியாக மோதும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்.. கெட்ட வார்த்தைகளால் தெறிக்க விட்ட போர் ட்ரெய்லர்

இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொள்கிறார்கள். படம் முழுக்க பிளேபாயாக வலம் வந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். மேலும் படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளையும் பேசி இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் எப்போதும் போல நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இன்றைய கலாச்சாரம் எவ்வாறு ஒரு மோசமான நிலையில் செல்கிறது என்பதை காட்டும் விதமாக போர் படம் அமைந்துள்ளது. பிளஸ் என்னவென்றால் இப்போது உள்ள இளைய தலை முறையினருக்கு பிடிக்கும்படி இருக்கும்.

அதோடு முதல் பாதியை விட இரண்டாவது பாதி நன்றாக உள்ளது. படத்திற்கு மைனஸாக அமைத்தது மோசமான கெட்ட வார்த்தை இடம் பெற்று இருந்தது. மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2/5

Trending News