செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சித்தார்த் பட கலக்சனை திணறடித்த போர் தொழில்.. ஆரவாரமில்லாமல் பல கோடிகளை வாரி இறைக்கும் சூப்பர் காம்போ

Por Thozhil: தமிழ் சினிமாவில் கடந்த ஒரு சில வருடங்களாக ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நல்ல கதை இருந்தாலே போதும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் வகையில் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. லவ் டுடே, விடுதலை, குட் நைட் போன்ற படங்கள் இந்த வரிசையில் சமீபத்தில் ரிலீஸ் ஆகியவை தான். தற்போது அந்த லிஸ்டில் போர் தொழில் திரைப்படமும் இணைந்திருக்கிறது.

எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல், தேவையில்லாத பில்டப்களும் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது இந்த திரைப்படம். உண்மைய சொல்லப்போனால் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை இப்படி ஒரு படம் இருப்பதே யாருக்கும் தெரியாது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் தமிழ் சினிமா ரசிகர்களிலேயே கவனத்தை ஈர்த்தது.

Also Read:சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்க முடியாமல் லோக்கல் போலீஸ் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், குற்ற புலனாய்வு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு அதன் பின்னால் நடைபெறும் விசாரணைகளை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். எந்த ஒரு விளம்பரங்களும் இல்லாமல் படம் பார்த்தவர்கள் மற்றும் விமர்சனங்கள் மூலமே இந்த படம் வெற்றி அடைந்திருக்கிறது.

படம் முதல் நாள் ரிலீஸ் அன்று அந்த அளவுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அன்று இரவு நைட் ஷோவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். இந்த படத்தின் முதல் நாள் வசூல் 1.93 லட்சமாக இருந்தது. அதே நாளில் ரிலீஸ் ஆன சித்தார்த்தின் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு மற்றும் முதல் இரண்டு காட்சிகள் நன்றாகவே சென்றது.

Also Read:சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

வார இறுதி நாட்கள் ஆன கடந்த இரண்டு நாட்களில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வசூலில் வேட்டையாடி இருக்கிறது போர் தொழில் திரைப்படம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் கூட்டம் படத்தை பார்ப்பதற்கு அதிகமாக வர, தியேட்டர் ஸ்கிரீன்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களின் வசூல் 2.5 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் அது 10 கோடியை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தொழில் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு நடிகர் சித்தார்த்தின் டக்கர் படத்தை மொத்தமாக தூக்கி சாப்பிட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த மூன்று நாட்களில் படத்திற்கான ரெஸ்பான்ஸ் மற்றும் விமர்சனங்கள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகி இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் பேச வைத்திருக்கிறது இந்த படம்.

Also Read:பதட்டத்திலேயே வைத்திருக்கும் சிறந்த 6 புலனாய்வு படங்கள்.. ராட்சசனை மிஞ்சிய போர் தொழில்

Trending News