செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்.. தமிழினத்தின் தலைவனாக நடிக்க போகும் ஹீரோ!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாற்றை வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சூரியை கதாநாயகனாக வைத்த விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஒரு பதிவை போட்டிருந்தார். அதாவது சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நிறைய விமர்சனங்கள் எழுந்தது. இந்த சூழலில் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், விடுதலைப் போராளி தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வே பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றையும் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக பதிவிட்டிருந்தார்.

Also Read :தனுஷை துன்புறுத்திய வெற்றிமாறன்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

மேலும் இந்த படத்தை சீமானே தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தார். வரலாற்றால் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தனக்கான வரலாற்றைத் தானே எழுதுவார்களானால் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கு ஏற்ப எங்களுக்கான வரலாற்றை நாங்கள் எழுதும் நாள் வரும் என சீமான் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த படத்தில் தமிழினத்தின் தலைவன் வே பிரபாகரன் கதாபாத்திரத்தில் யார் நடப்பது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடியவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார்.

Also Read :ராஜராஜசோழன் இந்துவா இல்லையா? கொந்தளித்த வெற்றிமாறன்

இதனால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆகையால் பிரபாகரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடித்த அதிக வாய்ப்பு இருக்கதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து வருகிறார். சூர்யாவின் வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளதால் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என தெரிகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

Also Read :விடுதலை படத்தால் பதட்ட நிலையில் இருக்கும் பிரபலம்.. வெற்றிமாறன் செய்யும் தில்லாலங்கடி வேலை

Trending News