Actor Prabhas: பாகுபலி நாயகனின் புது அவதாரமான ஆதிபுருஷ் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ராமாயண காவியத்தை மையப்படுத்தி 3டி தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே இந்த படம் பற்றிய பேச்சு தான் மீடியாவில் அதிகமாக இருந்தது. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்காக பட குழு கடுமையான புரமோஷனையும் செய்து வந்தது. ஆனால் அது அனைத்தும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது படம் எப்படி இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Also read: ஆதிபுருஷ் விமர்சனம் கிளப்பிய பீதி.. 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையா?
அந்த வகையில் பிரபாஸின் நடிப்பு பாராட்டும் வகையில் இருப்பதாக கூறும் ரசிகர்கள் விசுவல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். மேலும் இவ்வளவு பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் இது ஒரு பெரிய குறையாக இருப்பதாகவே தோன்றுகிறது.

ஏற்கனவே இது பற்றிய விமர்சனங்கள் வந்திருந்தாலும் தற்போது பெரிய திரையில் பார்க்கும்போது இது கொஞ்சம் நெருடலாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் பிரபாஸின் இந்த ராம அவதாரம் பாராட்டும் படியாகவே இருப்பதாக கூறும் ரசிகர்கள் அடுத்தடுத்த தலைமுறைகள் இவரை கடவுள் ராமராக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் எனவும் கூறுகின்றனர்.

Also read: சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா.? முதல்ல அனுமார், இப்ப ராமர்.. ஆதிபுருஷ் தல தப்புமா!
இது ஒரு புறம் இருந்தாலும் சில ரசிகர்களுக்கு இப்படம் திருப்தி தரவில்லை என்பதும் தெரிகிறது. அந்த வகையில் இக்காலத்திற்கு ஏற்ற மாறி வெளிவந்திருக்கும் இந்த ராமாயண காவியம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர். அதாவது படத்தில் காட்டப்படும் பல பெண்கள் இன்றைய நவநாகரிக மங்கைகளாக காட்டப்பட்டு இருப்பது பெரிய மைனஸ்.

அதிலும் ராவணனின் தோற்றம் 2k கிட்ஸ் போல் இருப்பதாகவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்தின் முதல் காட்சி ஆரவாரத்தோடு தான் கொண்டாடப்பட்டு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்போது சில காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also read: இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்