வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கான ப்ரமோஷன் இப்போது களைக்கட்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது படக்குழு பைனல் ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான டீசர் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

Also read: ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

டெக்னாலஜி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று வந்த விமர்சனத்தால் படக்குழு ரசிகர்களை கவரும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ட்ரெய்லர், ராவணன் சீதையை கவர்ந்து செல்வது போன்ற காட்சியுடன் ஆரம்பம் ஆகிறது.

அதைத்தொடர்ந்து இராமன் சீதையை மீட்டெடுக்கவும், அதர்மத்தை வேரோடு அழிக்கவும் களம் இறங்குகிறார். அவருக்கு துணையாக வரும் வானரப் படைகள், போர் காட்சிகள் என ட்ரெய்லர் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேலும் இதிகாசத்தில் உங்கள் பெயரை படித்தவுடன் மதிப்பளித்து தலை வணங்க வேண்டும், அகங்காரத்தின் நெஞ்சை பிளந்து வெற்றி கொடியை பறக்க விடுவோம் போன்ற வசனங்கள் சிறப்பாக இருக்கிறது.

Also read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

இப்படியாக பிரம்மாண்டமான போர் காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை என அதிக பொருட்ச அளவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே எதிர்மறை விமர்சனங்களை தான் சந்தித்து வருகிறது. அதிலும் 500 கோடி பட்ஜெட்டா, நம்பவே முடியவில்லையே என்ற கருத்துக்கள் தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதுவே பட குழுவினருக்கு ஒருவித பயத்தையும் காட்டியுள்ளது. அதனாலேயே வித்தியாசமான முறையில் ப்ரமோஷன் செய்கிறோம் என்ற பெயரில் சில சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உறுதியிலும், பயத்திலும் இருக்கும் பிரபாஸ் நினைத்ததை சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News