வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

KGF இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்.. பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் சலார் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Salaar First Day Collection: கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்திருந்த சலார் நேற்று ஆரவாரமாக வெளியானது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலும் பிரபாஸின் ரசிகர்கள் இதை கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. இருப்பினும் கதையில் கே ஜி எஃப் வாடை வீசியது என்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்தது.

அதேபோன்று படத்தில் முக்கால்வாசி நேரத்தை சண்டைக் காட்சிகள் ஆக்கிரமித்து விட்டதாகவும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் சில கலவையான விமர்சனங்களும் கிடைத்தது. ஆனால் அது எதுவும் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

Also read: Salaar Movie Review- கன்சார் சாம்ராஜ்யத்திற்கு எதிராக எரிமலையாய் வெடிக்கும் பிரபாஸ்.. சலார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அந்த வகையில் சலார் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 70 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அதை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இந்திய அளவில் 95 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது. அதேபோன்று உலக அளவில் 175 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் பிரபாஸ் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. அதேபோல் கடைசியாக வெளிவந்த ஆதி புருஷ் பயங்கர ட்ரோல் செய்யப்பட்டது.

இதனாலேயே பிரபாஸின் மார்க்கெட் அவ்வளவுதான் என்ற பேச்சும் வெளிப்படையாக எழுந்தது. ஆனால் அதையெல்லாம் ஓரங்கட்டி சலார் மூலம் மறு பிரவேசம் செய்து இருக்கிறார் இந்த பாகுபலி நாயகன். அதேபோல் இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சலாருக்குப்பின் தமிழில் களமிறங்கும் பிரசாந்து நில்.. எந்த நடிகருனு கேட்டா ஆடிப் போயிடுவீங்க!

Trending News