ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக பான் இந்திய ஹீரோ.. மல்லுக்கட்டும் பிரபல வெளிநாட்டு நிறுவனம்

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் நாட்டின் மிகப்பெரிய பான்-இந்திய நடிகரானார் பிரபாஸ். அதன்பின் அவர் நடித்த சாஹோ திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் தோல்வி அடைந்தது. இருப்பினும் கைவசம் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சாலார் மற்றும் ஸ்பிரிட் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான படங்கள் உள்ளன.

தற்போது கிடைக்கப்பேற்ற தகவலின்படி, பிரபாஸை பிரபல ஹாலிவுட் நிறுவனமான “யுனிவெர்சல் ஸ்டுடியோஸ்” ஒரு படத்திற்காக அணுகியுள்ளது. இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் முடிந்ததாக கூறப்படுகிறது. யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக பிரபாஸை அணுகியுள்ளனர்.

நடிகர் அல்லது தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அத்தகைய உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், யுனிவர்சல் ஸ்டுடியோஸ் புதிய சூப்பர் ஹீரோவைப் பற்றிய தொடர்ச்சியான படங்களைத் தயாரிக்க விரும்புவதால், ஆசிய சூப்பர் ஹீரோவைப் பற்றிய படத்தைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தேர்வு பிரபாஸ் எனவும் அதற்கு அணுகியபோது, நடிகரும் நேர்மறையான பதில் கூறியுள்ளாராம். இதுமட்டுமின்றி யுனிவர்சல் ஸ்டுடியோஸ் பிரபாஸுக்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஓம் ரவுத்தின் ஆதிபுருஷ் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தின் தழுவலான ஆதிபுருஷில் சைஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆதிபுருஷின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி ராம் நவமியில் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன. ஆதிபுருஷ் படத்தை டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு மற்ற மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் நாடெங்கும் வெளியாகியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →