திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தீ விபத்தில் மாட்டிய நடிகையை அம்போவென விட்டு சென்ற பிரபுதேவா.. உயிர் பயத்தை காட்டிய சம்பவம்

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முக திறமை கொண்டு இருக்கும் பிரபுதேவா இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர். அந்த அளவிற்கு இவரை நடனத்தில் மிஞ்ச யாராலும் முடியாது. அந்த வகையில் நடன இயக்குனராக திரையுலகிற்கு நுழைந்த இவர் அதன் பிறகு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

அதில் சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படத்தில் நக்மா, வடிவேலு, எஸ் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அப்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: ஓநாய்களின் நடுவே பிரபுதேவா.. பயமுறுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அதாவது நக்மா, பிரபுதேவா இருவரும் லாரியில் வருவது போன்றும் அதில் பட்டாசு வெடிப்பது போன்றும் ஒரு காட்சியை படமாக்க பட குழு தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பயந்து போன நக்மா திகைத்துப் போய் நின்று இருக்கிறார். மேலும் பட குழுவினரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி இருந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் உதவி இயக்குனராக இருந்த வசந்தபாலன் தான் எந்த யோசனையும் இன்றி உடனே செயல்பட்டு நக்மாவை காப்பாற்றி இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே பிரபுதேவா அங்கிருந்து எகிறி குதித்து தப்பித்து இருக்கிறார். இப்படி ஒரு சம்பவத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நக்மா வசந்த பாலனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Also read: 4 கோடி சம்பளம், நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா.. என்னது கடைசியா நடிச்ச 5 படமும் சோலி முடிஞ்சிச்சா!

அது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு சட்டையையும் வாங்கி பரிசளித்திருக்கிறார். ஆனால் வசந்தபாலன் தன்னுடன் இருக்கும் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் சட்டை வாங்கி கொடுத்தால் நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார். உடனே நக்மாவும் அங்கிருந்த அத்தனை அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கும் சட்டையை வாங்கி கொடுத்து தன் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

அந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது இந்த விஷயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் உடன் நடிக்கும் ஹீரோயினை அம்போவெனே விட்டுவிட்டு பிரபுதேவா சென்றது வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்தை இயக்குனர் வசந்தபாலன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: டான்ஸ் ஆடியே மார்க்கெட்டை பிடித்த 5 ஹீரோக்கள்.. உச்சத்தை தொட்டு பார்த்த பிரபுதேவா

Trending News