தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து, அதன்மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அதில் சத்யராஜ் வில்லனாக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கி, அதன் பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும், இவர் பிரபுவுடன் இணைந்து இருவரும் கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தையும் இன்றும் தொலைக்காட்சியில் வந்தால் அதை சினிமா பிரியர்கள் தவறாமல் பார்க்கின்றனர்.
சின்னத்தம்பி பெரியதம்பி: 1987 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ்-பிரபு அண்ணன் தம்பியாக இருவரும் கதாநாயகர்களாக இணைந்து நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் முறைப்பொண்ணான நதியாவை வயதில் மூத்த சத்யராஜ் ஒருதலையாக காதலிக்க, ஆனால் பிரபு-நதியா இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்.
தம்பிக்காக முறைப்பெண்ணை விட்டுக்கொடுக்கும் சத்யராஜ், அவர்களது திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைப்பதற்காக எதிர்பாராத விதமாய் கொலை செய்துவிட பிறகு ஜெயிலுக்குப் போகும் போது விதவையாக இருக்கும் சுதா சந்திரனை திருமணம் செய்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபு-சத்யராஜின் காம்போ பக்காவாக வொர்க் அவுட் ஆயிருக்கும்.
சிவசக்தி: 1996-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் சத்யராஜ்-பிரபு உடன் ரம்பா, நக்மா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்தப்படத்தில் சத்யராஜ் எதிர்பாராத விதமாய் வில்லனாக குடும்பத்திற்காக மாறி விடுவார். பிறகு அவன் மனம் திருந்தி வாழ நினைத்தாலும் அவனால் அந்த ரவுடி கும்பலை நிறைந்து வெளிவர முடியாமல் தன்னுடைய குடும்பத்தை போலீஸ் அதிகாரியாக இருக்கும் பிரபுவிடம் ஒப்படைத்து, கடைசியில் பிரபுவுடன் இணைந்து சத்யராஜ் அந்த ரவுடி கும்பலை அழிப்பது தான் இந்த படத்தின் கதை.
பாலைவன ரோஜாக்கள்: மணிவண்ணன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் பிரபு இருவரும் முன்னணி கதாநாயகர்களாக இணைந்து நடித்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்களுடன் லக்ஷ்மி, நளினி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதில் சத்யராஜ் பத்திரிகையாளராக இருந்து அவருடைய நண்பனான பிரபு மற்றும் காதலியுடன் கெட்ட அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த ஒரு ஊழல் அமைப்புடன் போராடுவதுதான் இந்தப்படத்தின் கதை.
அண்ணா நகர் முதல் தெரு: 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சத்யராஜ்-பிரபு முன்னணி கதாநாயகர்களாக நடித்திருக்கும் இந்த படத்தை பாலு ஆனந்த் இயக்கி இருப்பார். இதில் அம்பிகாவை காதலித்து ஒரு கைக்குழந்தையுடன் விட்டுவிட்டு துபாய்க்கு வேலைக்கு செல்வார் பிரபு. படித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் சத்யராஜ், அம்பிகா வசிக்கும் தெருவில் கூர்காவாக வேலை பார்ப்பார். அங்கு விதவையாக இருக்கும் ராதாவை சத்யராஜ் விரும்புவார்.
கணவன் இல்லாமல் தவிக்கும் அம்பிகா மற்றும் அவளுடைய மகளை சத்யராஜ் பாசத்துடன் நண்பராக பழகி, வேண்டிய உதவியை செய்வார். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அம்பிகா மற்றும் சத்யராஜ் இருவரையும் தவறாக நினைத்துப் பேசுவார்கள். ஆனால் துபாயில் இருந்து வந்த பிரபு, அம்பிகாவை துளிக்கூட சந்தேகப்படாமல் சத்யராஜ்-ராதா இருவரின் காதலை சேர்த்து வைப்பார்.
இவ்வாறு சத்யராஜ் மற்றும் பிரபு இருவரின் காம்போ-வில் வெளியான படங்கள் ரசிகர்களை ரசிக்க செய்யும் வகையில் இருந்ததால், அந்தப் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.