ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆளை விடுங்கள் பிரபுதேவா.. கை கொடுக்காமல் எஸ்கேப் ஆகும் பெரிய தலைகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் சில நடிகர்கள் பாலிவுட், ஹாலிவுட் என அப்படியே வளர்ந்து கொண்டே செல்வார்கள். அப்படி நம் கண் முன்னே ஒரு நடன இயக்குனராக அறிமுகமாகி பின் இயக்குனர் மற்றும் நடிகர் என்று பல அவதாரங்கள் எடுத்த பிரபுதேவா அவர்கள், திடீரென பாலிவுட், ஹாலிவுட் என கலக்க ஆரம்பித்தார். இவ்வளவு காலமாக நடித்து வரக்கூடிய நடிகர்கள் கூட இப்படி பல திரை உலகத்திற்குள் நுழைவது கடினமாக இருப்பதால் பிரபுதேவா மட்டும் அசால்டாக எல்லாம் செய்கிறாரே என்று அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

ஆனால் கொஞ்ச நாள் கழித்து வாரத்திற்கு ஒரு படம் என்று கிட்டத்தட்ட வருடத்திற்கு ஏழு எட்டு படங்களில் நடித்து வெளியிட ஆரம்பித்தார் பிரபுதேவா. ஆனால் அவர் நடித்த எந்த படத்திலும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே கெட்டப்பில் எல்லா படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். படத்தின் டைட்டிலும் படத்தின் கதை மட்டுமே மாறி இருந்தது என பல விமர்சனங்கள் வந்தது.

விஜய் ஆண்டனி போல கதை அம்சத்தை நம்பி இவர் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது வரிசையாக இப்படி படங்களை எடுத்தால், எந்த படத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பேய் படம், ரொமான்டிக் படம், போலீஸ் படம் என பல பரிமாணங்களில் படத்தை எடுத்து தயாரிப்பாளர்களை ரூம் போட்டு அழ வைத்துவிட்டார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேள், பொன்மாணிக்கவேல் போன்ற பல படங்கள் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைத்தது. இதுபோக வரிசையாக 13 படங்கள் தற்போது கையில் வைத்திருக்கிறார். அதில் பாதி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் மனுஷன் பொலம்பிட்டு இருக்காரு. இந்த சமயத்தில் இருக்கிற படத்தை முடிப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கும்போது புது படங்களை கமிட் ஆவதை தற்போது பிரபுதேவா தவிர்த்து வருகிறாராம்

தயாரிப்பாளர்கள் பக்கமும் பிரபு தேவாவை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் நஷ்டம்தான் வரும் என்று முடிவு செய்து பிரபுதேவாவிற்கு இனி நாங்கள் பைனான்ஸ் செய்ய மாட்டோம் என்று தெறித்து ஓடுகிறார்கள். இதனால் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் பிரபுதேவா அவர்கள் . ஜெயிக்கும் குதிரையில் தான் பணம் கட்டுவார்கள் ஆனால் குதிரை ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் . ஒரு முறை தோற்றால் கூட அந்த குதிரையின் மேல் பணம் கட்டுவதை நிறுத்தி விடுவார்கள். அதற்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறது பிரபுதேவாவின் தற்போதைய நிலை.

Trending News