அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ராஜா ராஜாதி’ பாடல் மூலம் கோலிவுட்டில் நடன இயக்குனராக அறிமுகமானவர் பிரபுதேவா. தன்னுடைய வேகமான நடன அசைவுகளின் மூலம் இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படுகிறார். நடன இயக்குனராக வந்த பிரபுதேவாவுக்கு ஹீரோவாக வாய்ப்பும் கிடைத்தது.
1989 ஆம் ஆண்டு ரிலீசான இந்து திரைப்படம் மூலம் பிரபுதேவா ஹீரோ ஆனார். ராசைய்யா, லவ் பேர்ட்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படம் தான் பிரபுதேவாவுக்கு ஹீரோ அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று இப்போது வெளியில் வந்து இருக்கிறது.
Also Read: அந்த ஒரே படத்தால் டைரக்சனை கைவிட்ட பிரபு தேவா.. என்னது 100 கோடி நஷ்டமா?
1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் தயாரிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் காதலன். இந்த படத்தில் பிரபு தேவாவுடன் நக்மா, வடிவேலு, ரகுவரன், எஸ் பி பாலசுப்ரமணியம், மனோரமா, தாமு ஆகியோர் நடித்திருந்தனர். மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு பின்னணி குரல் கொடுத்தது நடிகர் விக்ரம்.
இந்த படத்தில் தமிழகத்தின் ஆளுநர் மகளான நக்மாவை, கல்லூரி தலைவனான பிரபு தேவா காதலிப்பார். நக்மா வீட்டிலிருந்து தப்பித்து ஒரு நாட்டிய கலைநிகழ்ச்சிக்கு பிரபுதேவாவுடன் செல்வார். அப்போது காவலாளிகள் நக்மா, பிரபு தேவா, வடிவேலுவை துரத்தி பிடிக்க பின்னால் செல்வது போன்று ஸ்டண்ட் சீன் இருக்கும்.
Also Read: நடிப்பை தவிர எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் பிரபுதேவா.. அதிருப்தியில் இருக்கும் இயக்குனர்
அந்த காட்சியின் போது நக்மாவும், பிரபுதேவாவும் ஒரு லாரியில் ஏறி தப்பித்து செல்வார்கள். அப்போது பின்னால் வரும் காவலாளிகளை விரட்ட லாரியில் இருக்கும் பட்டாசை கொளுத்தி அவர்கள் மீது போடுவார்கள். அந்த காட்சியின் போது வண்டிக்குள் இருந்த பட்டாசுகளும் தீப்பற்றி வெடிக்க ஆரம்பித்து விட்டதாம்.
இதனால் பயந்துபோன பிரபுதேவா நக்மாவை கூட பார்க்காமல் அவர் மட்டும் வண்டியிலிருந்து இறங்கி ஓடிவிட்டாராம். அப்போது இயக்குனர் சங்கரின் உதவியாளராக இருந்த இயக்குனர் வசந்த பாலன் தான் வண்டிக்குள் ஏறிக் குதித்து நக்மாவை காப்பாற்றினாராம். அதிலிருந்து நக்மா வீட்டில் உள்ள அனைவருக்கும் வசந்த பாலனை பிடிக்க ஆரம்பித்து விட்டதாம்.
Also Read: 4 கோடி சம்பளம், நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா.. என்னது கடைசியா நடிச்ச 5 படமும் சோலி முடிஞ்சிச்சா!