வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாரு சாமி நீ, இப்படி ஒரு மூளையா.? கவினை அடித்தது ஏன், உண்மையை உடைத்த பிரதீப்

Biggboss 7-Kavin-Pradeep: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக நகர்ந்து வரும் நிலையில் போட்டியாளர்களும் அதிக கவனம் ஈர்த்து வருகின்றனர். அதில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் இவரை கிறுக்கன், பைத்தியக்காரன் என கூறுவது உண்டு.

ஆனால் இவருடைய கேம் ப்ளான் வேற லெவலில் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. சரியாக காய் நகர்த்தி போட்டியாளர்களை ஓரங்கட்டும் சூட்சுமம் இவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் இது இந்த சீசனுக்காக வந்தது கிடையாது. முன்பே அவர் பிக்பாஸை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.

அதாவது இவர் பிக்பாஸ் 3 ல் கவினுக்கு பளார் என்று ஒரு அறை விட்டதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை பிரதீப் தற்போது உடைத்துள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் விசித்ராவிடம் பேசிய அவர் அது அத்தனையுமே பிளான் என்று கூறியிருந்தார்.

Also read: டிஆர்பிக்காக பலியாடான போட்டியாளர்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் எலிமினேஷன்

ஏனென்றால் அப்போது கவின் மேல் பல நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தது. அவை அனைத்தையும் தன் பக்கம் திருப்பி கவினை காப்பாற்ற தான் அறைந்திருக்கிறார். அப்பவே இப்படி ஒரு தந்திரம் என்றால் இப்போது சொல்லவா வேண்டும். நண்பனுக்காக பிளான் போட்ட அவர் தற்போது தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னெல்லாம் செய்வார்.

இதைத்தான் தற்போது ரசிகர்கள் வியப்புடன் பேசி வருகின்றனர். ஒரு விளையாட்டை எப்படி கொண்டு சென்றால் ஜெயிக்க முடியும் என்பதை அவர் புரிந்து கொண்டு தான் பிக்பாஸ் வீட்டுக்கே வந்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது யாரு சாமி நீ, உனக்குள்ள இப்படி ஒரு மூளையா என்று தான் கேட்க தோன்றுகிறது.

அதன்படி பிரதீப்பின் யுக்தி தற்போது நன்றாகவே வேலை செய்து வருகிறது. சோசியல் மீடியாவில் இவருடைய சமீப கால நடவடிக்கைகள் சில வெறுப்புகளை சம்பாதித்து வருகிறது. ஆனாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என சில ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். இதுதான் அவருடைய கேம் ப்ளான். இப்படியே சென்றால் நிச்சயம் அவர் டைட்டிலை அடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: கமல் வீட்டை விட்டு துரத்த போவது யாரை.? எலிமினேஷனால் தலைகீழாக மாறப் போகும் பிக்பாஸ்

Trending News