செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிக்பாஸ் 7 முடிஞ்சாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.. மாயாவுக்கு செக்மேட் வைத்த பிரதீப்

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்திருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு, இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்பே யார் டைட்டில் வின்னர் என மக்களால் சரியாக கனிக்கப்பட்டது. இது மக்களின் தீர்ப்பு என்று கூட சொல்லலாம். அதே நேரத்தில் பிக் பாஸ் பார்வையாளர்கள் அத்தனை பேரும் பிரதீப் ஆண்டனிக்காகவும் இப்போது வரை நீதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா பேச்சை கேட்டு பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு காட்டிய போட்டியாளர்கள் யாருமே வெளியில் வந்த பிறகு அதைப்பற்றி பேசவில்லை. ஐஷு மட்டும்தான் தைரியமாக பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டதோடு, தான் செய்தது தவறு என்றும் ஒத்துக் கொண்டிருக்கிறார். மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ஒரு நாள் வெளியே வந்து தான் ஆக வேண்டும், அப்போது அவர்களிடம் இதைப் பற்றி கேட்டு பிரதீப்புக்கு சரியான நீதியை வாங்கி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆவலாக இருந்தனர்.

Also Read:சீசன் 7 துவக்கத்திலிருந்து, இறுதிவரை நடந்த சுவாரஸ்யம்.. ஐந்து ஃபைனல் லிஸ்ட்க்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் பரிசு

பூர்ணிமா வெளியே வந்ததும் நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பேசிவிட்டு தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்ளலாம் என திட்டம் போட்டு கூட பேட்டி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிரதீப் அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டார் என்று தான் இப்போது சொல்ல வேண்டும்.

செக்மேட் வைத்த பிரதீப்

பிரதீப் ஆண்டனி தன்னுடைய சமீபத்திய பதிவு ஒன்றில், ஹாய் மாயா கிருஷ்ணன், லைஃப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பன்னு எனக்கு தெரியும். உன்னுடன் ஆன என்னுடைய நட்பிற்கு மதிப்பு வெறும் ஐம்பது லட்சம் மட்டும் தானா? நான் அவ்வளவு வொர்த் இல்லன்னு நெனச்சேன், ஆனா இப்போ புரியுது. உன்னுடன் பிக் பாஸ் விளையாட்டை விளையாடியது நன்றாக இருந்தது, செக்மேட் என சொல்லி இருக்கிறார்.

பிரதீப் போட்ட இந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் இந்த விஷயத்தில் மாயா மீது தப்பில்லை, உங்கள் மீதுதான் தப்பு, நீங்கள் மாயாவை நம்பியது ரொம்பவே தவறான விஷயம் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த ரெட் கார்டு பற்றி மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து பதில் சொல்லியே ஆக வேண்டும் என பிரதீப் உடைய ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்தப் பதிவிற்கு மாயாவின் ரசிகர்கள், ஏற்கனவே மாயாவை உங்களுடைய ரசிகர்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சமூக வலைத்தளத்தில் அசிங்கப்படுத்தி விட்டார்கள். நீங்கள் இப்போது இது மாதிரி பதிவை போட்டு அவர்களை மீண்டும் தூண்டி விடாதீர்கள், இந்த பிரச்சனை எல்லாம் இதோடு விட்டு விடுங்கள் என பிரதீப் ஆண்டனிக்கு எதிராக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Pradeep antony

Pradeep maya
Pradeep maya

Also Read:பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத்தொகை 50 லட்சத்தொடு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த விஜய் டிவி

Trending News