Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிரதீப் ரங்கநாதனால் திசை மாறிப்போன அசோக் செல்வன்.. செகண்ட் இன்னிங்சை கேள்விக்குறியாக்கிய லவ் டுடே

பிரதீப் ரங்கநாதனால் திசை மாறிப்போன அசோக் செல்வன்.. செகண்ட் இன்னிங்சை கேள்விக்குறியாக்கிய லவ் டுடே

2022ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் ரிலீஸ் ஆனது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் கொள்ளை லாபம் பார்த்த படம் இது. வெறும் ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 105 கோடிகள் வசூலித்து […]

2022ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் ரிலீஸ் ஆனது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் கொள்ளை லாபம் பார்த்த படம் இது. வெறும் ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 105 கோடிகள் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டது.

இந்த படம் வந்த அதே நாளில் வெளிவந்த மற்றொரு படம் நல்ல கதை அம்சம் இருந்தும் கூட, லவ் டுடே படத்தை இளசுகள் கொண்டாடியதால் எடுபடாமல் போனது. இப்பொழுது கூட ஓடிடியில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாஸ்டல், மன்மத லீலை என செகண்ட் இன்னிங்சை தொடங்கிய நடிகர் அசோக் செல்வன் நடித்த “நித்தம் ஒரு வானம்” படம் நவம்பர் 4, 2022 ஆம் ஆண்டு லவ் டுடே ரிலீஸ் ஆன அதே நாளில் தான் ரிலீசானது. ஆனால் பல தியேட்டர்களில், லவ் டுடே படத்தால் இதற்கு மவுஸ் குறைந்தது

இப்பொழுது அசோக் செல்வன் மீண்டும் தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார், தக்லைப் என பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் நித்தம் வருவானம் படம் இவருக்கு பிரேக்கிங் பாயிண்டாக அமைய வேண்டிய படம். லவ் டுடே படத்தால் ஜொலிக்கவில்லை.

நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கியவர் கார்த்திக். இவர் இப்பொழுது பிரியங்கா மோகனை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து உருவாகி வரும் படம் அது. மேலும் கார்த்திக் தெலுங்கில் நாகார்ஜுனாவின் நூறாவது படத்தையும் இயக்கி வருகிறார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.