திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எலும்பா, ஆமை என தனுஷ், அஜித்தை கலாய்த்த பிரபலம்.. பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்

கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருக்கும் தல அஜித் முதல் தனுஷ் வரை நடிகர்களை சோசியல் மீடியாவில் கலாய்த்த பிரபலம் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.

இதைப் போன்று தான் லவ் டுடே படத்தின் மூலம் இளசுகளின் மனதைக் கவர்ந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் போட்டிருக்கும் பழைய ட்விட்டர் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Also Read: ஜிவி பிரகாஷ்-சை சங்கடத்தில் மாட்டி விட்ட பத்திரிக்கையாளர்.. நேர்த்தியான பதிலால் குவியும் பாராட்டு

இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் பிரபலங்களின் பழைய ட்விட்டர் பதிவுகளை தீயாய் தேடி அதை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் பழைய ட்விட்டர் பதிவுகளை பார்த்தால், முன்னணி ஹீரோக்களை அவர் கேலி கிண்டல் செய்து இருக்கிறார்.

அதிலும் ‘தனுஷை பகைத்துக் கொண்டதால் தான் ஜிவி பிரகாசுக்கு சனி பிடிச்சு ஆடுகிறது’ என்று தனுஷின் ரசிகர் ஒருவர் ட்விட் செய்திருக்கிறார். அதற்கு ஜிவி பிரகாஷ், ‘டேய் லூசு. அதுக்கு அப்புறம் தான் என் சம்பளம் இருமடங்கானது. அதன் பிறகு தான் ஹீரோ ஆனேன், என் சிப்ஸ்சு’ என்று பங்கம் செய்திருக்கிறார்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டாரின் தரமான 5 படங்கள்.. கெட்ட பெயரை துடைத்து பத்தினியாக வாழ்ந்து காட்டிய கதாபாத்திரம்

அதுமட்டுமல்ல ‘குள்ள பயலே’ என்னை திட்டிய தனுஷ் ரசிகரை, ‘எலும்பா! எடுத்து இடுப்புல வச்சுப்பீங்களா’ என்றும் கூறியுள்ளார். அத்துடன் தல ரசிகர் ஒருவர், ‘பழையபடி மியூசிக்கையே போடப் போயிரு’ என சொன்னதற்கு ‘நீங்க பழையபடி பைக் ரேஸ்க்கே போயிருங்க’ என்றும் கிண்டல் அடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் ட்விட்டர் பதிவு

gv-prakash-cinemapettai
gv-prakash-cinemapettai

அதுமட்டுமில்லாமல் தல அஜித்தை மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் ஆமை என்றும் விமர்சித்துள்ளார். இப்படி ஜிவி பிரகாஷ் ரசிகர்களுடன் அஜித் தனுஷை கிண்டல் அடித்திருப்பது அவருடைய ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

ஜிவி பிரகாஷ் ட்விட்டர் பதிவு

gv-prakash-twit-1
gv-prakash-twit-1

Also Read: முடிவுக்கு வந்த அண்ணன், தம்பி உறவு.. காசு விஷயத்தில் கரார் காட்டியதால் அஜித் செய்யப்போகும் காரியம்

ஆனால் பிரதீப் ரங்கநாதனின் பழைய ட்விட்டர் பக்கத்தை பற்றி சர்ச்சை கிளம்பிய போது, அவற்றுள் சில உண்மையானவை என்றும் சில பொய்யான போட்டோ ஷாப் செய்யப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார். இப்போது ஜிவி பிரகாசும் இது பற்றி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தனுஷ் மற்றும் தல ரசிகர்கள் காட்டமாக விமர்சிக்கின்றனர்.

Trending News