சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

பாலிவுட்டில் வசூலில் மொக்கை வாங்கிய பிரதீப்பின் லவ் டுடே ரிமேக்.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Pradeep Ranganathan: என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே என்று சத்யராஜ் சொல்லுவார். இந்த வசனம் சினிமா ரசிகர்களுக்கு தான் பொருந்தும்.

எந்த படத்தை ஹிட் ஆக்குவார்கள், எந்த படத்தை மொத்தமாய் படுக்க வைத்து விடுவார்கள் என்பது கணிக்கவே முடியாது.

அப்படித்தான் இப்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த லவ் டுடே படத்தில் நிலைமையும் ஆகியிருக்கிறது.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

தமிழில் ஐந்து கோடி தயாரிப்பில் உருவான இந்த படம் 100 கோடி வசூல் செய்தது. தென்னிந்திய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

இதை நம்பி பாலிவுட்டில் இந்த படத்தை ரீமேக் செய்து அமீர் கானின் மகன் ஜன்னத் கான் மற்றும் ஸ்ரீ தேவியின் மகள் குஷி கபூரை வைத்து எடுத்தார்கள்.

இந்த படம் மொத்தம் 60 கோடி தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் உலக அளவில் வசூலான மொத்த தொகை 16 கோடி தான்.

ரீமேக் படம் என்பதால் ரசிகர்களிடையே செல்லுபடி ஆகவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

போர போக்கை பார்த்தால் இந்தியாவில் 10 கோடி வசூல் கூட இந்த படம் எட்டாது எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News