வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நயன்தாரா பத்தி பிரதீப் போட்ட ட்வீட், வைரலாக்கும் நெட்டிசன்ஸ்.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!

Nayanthara: நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல் சிக்கி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். சமூக வலைத்தளம் என்பது எந்த அளவுக்கு பொழுதுபோக்காக இருக்கிறதோ அதே அளவுக்கு சில நேரங்களில் பெரிய அளவில் ஆப்பு வைத்து விடும் என்பது பிரதீப்புக்கு தான் பொருந்தும் போல.

நயன்தாரா மற்றும் தனுஷ் இருவருமே சினிமா துறையில் பெரிய பக்க பலத்துடன் இருப்பவர்கள். இவர்களது பிரச்சனையில் வாய்விடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதுதான் பல நடிகர் நடிகைகளின் இப்போதைய முடிவு.

நயன்தாரா பத்தி பிரதீப் போட்ட ட்வீட்

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நட்சத்திரங்களே இதைப் பற்றி பேசாமல் கப்பு சிப்பு என்று இருந்து வருகிறார்கள்.இந்த பஞ்சாயத்து நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருப்பதால் தனுஷ் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள்.

இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றும் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. அந்தப் பதிவில் நானும் ரவுடிதான் படத்தை பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார் பிரதீப். படத்தில் பணி புரிந்த நட்சத்திரங்களையும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

ஆனால் நயன்தாராவை குறிப்பிட்டு கொஞ்சம் கம்மியா நடிங்க என கலாய்த்து இருக்கிறார். தற்போது இந்த பதிவு பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. பிரதீப் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் LIC படத்தில் நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு இப்போது அதிகமாகவே இருக்கிறது. இப்படி ஒரு தருணத்தில் தான் நம் லவ் டுடே நாயகன் வசமாக சிக்கி இருக்கிறார்.

Pradeep Nayan
Pradeep Nayan

Trending News