
Pradeep Ranganathan : கோமாளி படத்தின் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இப்போது ட்ரெண்டிங் ஹீரோவாக இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே படத்தை பிரதீப் எடுத்திருந்தார்.
இந்த படத்தின் கதை, இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்தையுமே பிரதீப் தான் பார்த்துக் கொண்டார். லவ் டுடே படத்தில் நடிக்கும் போது ஆரம்பத்தில் இவருக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 70 லட்சம் சம்பளம் பேசி இருந்தது.
இந்நிலையில் லவ் டுடே படம் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 44 கோடி லாபம் ஏஜிஎஸ் பெற்றிருந்தது. இதனால் மீண்டும் 80 லட்சம் தொகையை பிரதீப்புக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.
டிராகன் படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்
ஆகையால் லவ் டுடே படத்திற்கு ஒன்றரை கோடி சம்பளம் பெற்றிருந்தார். மீண்டும் ஏஜிஎஸ் உடன் இணைந்த படம் தான் டிராகன். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கிய நிலையில் கதாநாயகனாக மட்டும் தான் பிரதீப் நடித்திருந்தார்.
ஆனால் டிராகன் படத்தில் நடிப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட 12 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். கிட்டத்தட்ட 800 சதவிகிதம் இவரது சம்பளம் உயர்ந்து இருக்கிறது. லவ் டுடேவில் எல்லா வேலைகளும் செய்த போது அவருக்கு சம்பளம் குறைவுதான்.
அந்த வெற்றியினால் இப்போது பிரதீப்பின் மார்க்கெட் உச்சத்தை தொட்டு இருக்கிறது. அதோடு இப்போது வெளியான டிராகன் படமும் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி இருக்கிறது.
இதனால் அடுத்தடுத்த படங்களில் பிரதீப்பின் சம்பளம் பல மடங்கு அதிகரிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் பிரதீப்புடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறது.