சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ரெட் கார்டு சர்ச்சையால் குத்துப்பட்ட வனிதா.. பிரதீப் ஷேர் செய்த வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட் பின்னணி

Pradeep-Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் இன்னும் முற்றுப்பெறாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கமல் அதற்கு பூசி மெழுகி விளக்கம் அளித்தாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அது நேற்று வனிதா வெளியிட்ட போட்டோவிலேயே வெளிப்படையாக தெரிந்தது.

அதில் வனிதாவின் முகம் ரத்த காயத்துடன் வீங்கி போய் இருந்தது. அதை வெளியிட்ட வனிதா பிரதீப்பின் ரசிகர் செய்த செயல் என்று கூறியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் இருட்டான இடத்தில் யார் அந்த மர்ம நபர் என்று தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Also read: குழம்பிய குட்டையில் மீன் பிடித்த பிக்பாஸ்.. வைல்ட் கார்ட் பத்த வச்ச நெருப்பால் ஆட்டம் கண்ட மாயா மாஃபியா

அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர் ரெட் கார்டுக்கு சப்போர்ட் பண்றியா என கூறி இருக்கிறார். இதிலிருந்தே அவர் பிரதீப்பின் ஆதரவாளர் என தெரிவதாக வனிதா கூறியது சர்ச்சையாக கிளம்பியது. அதை அடுத்து பிரதீப் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் நடந்தது என்ன என தெரியவில்லை, ஓய்வு எடுங்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் ஒரு வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்திருந்தார். அதில் நவம்பர் 5ஆம் தேதி அதாவது பிரதீப் பிக் பாஸை விட்டு வெளியேறியதற்கு மறுநாள் வனிதா மெசேஜ் செய்திருக்கிறார்.

Also read: என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே கண்ணு.. பூர்ணிமா மூஞ்சில கரிய பூசிய மாயா, நண்பேன்டா

அதில் பிரதீப், நான் உங்கள் மகளுக்கு எதிரானவர் அல்ல இப்பொழுது எதுவும் பேச முடியாது ஷோ முடியட்டும் என கூறியிருக்கிறார். அதற்கு வனிதா ரெட் கார்டு கொடுத்ததற்கு வருத்தம் தெரிவித்ததுடன் பிரதீப்பின் கேம் பிளான் பற்றி பேச வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். இந்த ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டதன் மூலம் பிரதீப் நான் யாருக்கும் எதிராக இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பதிவை வெளியிட்ட அவர் உடனே அதை நீக்கியும் விட்டார். உண்மையில் ரெட் கார்டு சம்பவத்தை பற்றி பிரதீப் பேசினால் மட்டும் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். ஏனென்றால் தற்போது மாயா இது குறித்து அளவுக்கு அதிகமாக பதட்டப்படுவது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அந்த உண்மையை தெரிந்து கொள்ள நாம் சில வாரங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

pradeep-tweet
pradeep-tweet

Trending News