Pradeep Ranganathan: ஒரு செமஸ்டரில் 48 பேப்பர் கிளியர் பண்ணுவாரா, யாரு காதில் பூ சுத்துறீங்க என்று படத்தைப் பார்த்த நிறைய பேர் கமெண்ட் செய்தது உண்டு.
அதிலும் படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் ஒரு பக்கம் பிரதீப் வேற காலேஜ் மாணவர்களை போட்டு புரட்டிக் கொண்டிருப்பார். இன்னொரு பக்கம் குட்டி டிராகன் கேள்வி பதில்களை பிரதீப்புக்கு வாசித்துக் காட்டுவார்.
என்னதான் நல்லா படிக்கிற மாணவனாக இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா என்ற நமக்கும் தோன்றியிருக்கலாம்.
பிரதீப் தனுசுக்கு போட்ட ட்வீட்
ஆனால் உண்மையிலேயே ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வந்து விட்டால் நிஜ வாழ்க்கையிலும் எல்லாமே சாத்தியமாகும் என்பதை நிரூபித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும் போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு பெரிய நடிகரை கலாய்த்த சமூக வலைதள பதிவுகள் வைரலாகும்.
ஆனால் இந்த முறை பிரதீப்பின் சமூக வலைதள பதிவு வைரலானது அவருடைய கடின உழைப்பை காட்டி இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் தான் App (a) lock. இந்த படத்தின் மீள் உருவாக்கம் தான் லவ் டுடே படத்தின் கதை.
2d என்ற என்டர்டெயின்மெண்ட் நடத்திய போட்டியில் இந்த குறும்படம் செய்திருக்கிறது. பிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்து தனுஷை டேக் செய்து சார் நீங்க என்னுடைய படத்தை கண்டிப்பா பார்க்கணும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

எட்டு வருடம் கழித்து தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் இவர் நடித்த டிராகன் படத்துடன் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் அந்த படத்தை விட இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.