வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முரட்டு வில்லனாக 5 குடும்பப் படங்களில் கலக்கிய பிரகாஷ்ராஜ்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுனா எப்படி ப்ரோ

கோலிவுட்டில் முரட்டு வில்லனாக பெயர் போன பிரகாஷ்ராஜ் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருடைய வில்லத்தனத்தை ரசிப்பதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ‘செல்லோ’ என ஒத்த வார்த்தை சொன்னாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு, பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நடித்த 5 படங்களை சூப்பர் என சொல்ல வாய் கூசுகிறதாம்.

ஜெய் பீம்: சூர்யா நடிப்பில் உண்மை சம்பவங்களை படமாக்கி மாபெரும் வெற்றி கண்ட ஜெய் பீம் படத்தில் ஐ.ஜி. பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். இதில் எவ்வித வில்லத்தனமும் இல்லாமல் சாந்தமான காவல்துறை அதிகாரியாக நடித்தது இந்த படத்தில் அவருடைய இருப்பே இல்லாமல் போனதாக ரசிகர்கள் நினைத்தனர்.

விருமன்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இந்த படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் பெத்த மகனுக்கே வில்லனாக தாசில்தார் முனியாண்டி கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்த பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் சரியாக எடுபடவில்லை. என்னதான் குடும்பக் கதைக்களம் என்றாலும் குடும்பத்துக்குள்ளேயே அதிலும் தந்தை மகனையே எதிரும் புதிரும் ஆக காட்டியதால் பிரகாஷ்ராஜின் முரட்டு வில்லத்தனம் செல்லுபடி ஆகலை.

Also Read: திரும்பத் திரும்ப இந்த 5 வில்லன்களை வைத்து ஒப்பேத்தும் தமிழ் சினிமா.. வாரிசுக்கு பின் சோலி முடிந்த பிரகாஷ்ராஜ்

திருச்சிற்றம்பலம்: 2022 ஆம் ஆண்டு தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிப்பில் வெளியான இந்த படத்தில் தனுசுக்கு அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இவர் வில்லனாக நடிக்காவிட்டாலும் தனுஷின் பார்வையில் அவர் வில்லனாகவே தெரிந்தார்.

ஏனென்றால் இந்த படத்தின் முக்கால்வாசி பகுதியில் மகன் தனுஷ் வெறுக்கும் தந்தையாகவே பிரகாஷ்ராஜ் இருப்பார். இந்த கேரக்டரில் அவரது முழு திறமையும் வெளிப்படவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரகாஷ்ராஜின் முரட்டு வில்லத்தனம் வெளிப்படாமல் மகனிடம் மட்டுமே வில்லத்தனத்தை காட்டக்கூடிய தந்தையாகவே தெரிந்தார்.

பொன்னியின் செல்வன்: கல்கியின் நாவலை படமாக்க வேண்டும் என்ற திரைக்கதைவுடன் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு விருந்தளித்தார். வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார் இதில் பிரகாஷ்ராஜ் உடல்நலம் குன்றிய வயதான கேரக்டராகவே படம் முழுவதும் வருவார்.

Also Read: தயாரிப்பிலும் பெத்த லாபம் பார்த்த பிரகாஷ்ராஜ்.. காசு போட்ட 6 படங்களுமே ஹிட்

ஒருவேளை விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்தில் சுந்தர சோழரின் வாலிப பருவத்தில் பிரகாஷ்ராஜின் கம்பீரம் வெளிப்படுமோ என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜுக்கான காட்சி மிகக் குறைவாகவும் முரட்டு வில்லனாக பார்த்த அவருடைய முழு திறமையும் வெளிப்படாமல் இருந்தது.

வாரிசு: இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் விஜயின் வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் விஜய்யுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குடும்ப கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் இடையே கில்லி படத்தில் இருந்த எதிரும் புதிரும் வாரிசு படத்தில் தெரியவில்லை. இதில் பிரகாஷ்ராஜின் நடிப்பும் ஓரளவு தான் ஓகேவாக இருந்தது.

Also Read: அப்பாவாக அசத்திய பிரகாஷ்ராஜின் 6 படங்கள்.. அதிலும் அந்த கடைசி படத்தில வாழ்ந்திருப்பார் மனுஷன்!

இவ்வாறு தமிழ் சினிமாவில் பயம் காட்டும் முரட்டு வில்லனாக மிரட்டிய பிரகாஷ்ராஜ் சமீபத்தில் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் கலக்கினாலும் எல்லா படங்களும் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

Trending News