வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அவர் தெய்வமகனா, டெஸ்ட் டியூப் பேபி.. மோடியை விட்டு விளாசிய பிரகாஷ்ராஜ்

Prakash Raj: கடந்த சில வருடங்களாகவே பிரகாஷ்ராஜ் ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். அநீதி எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என பல விஷயங்களுக்காக குரல் கொடுத்தும் வருகிறார்.

அதில் மோடியை அவர் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு. அப்படித்தான் தற்போது ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் மோடி தெய்வமகன் கிடையாது. அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி என ஒருமையில் கொந்தளித்து பேசி இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் பேசிய பிரகாஷ்ராஜ் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

நான் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திறந்த வண்டியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மக்கள் பலரும் என்னை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அருகில் இருந்தவர் வேண்டாம் ஏதாவது விபரீதம் ஆகிவிடும் என்று கூறினார்.

பிரகாஷ்ராஜின் ஆவேச பேச்சு

ஆனால் நான் பரவாயில்லை என்று அனைவருக்கும் கை கொடுத்தேன். அப்போது அவர்களின் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. பூக்கார அம்மா கை கொடுத்த போது மென்மை தெரிந்தது. இரும்பு கடைக்காரர் கை கொடுத்த போது கடினம் தெரிந்தது.

ஆனால் சர்வாதிகார ஆட்சி செய்யும் மன்னர் புஷ்ப விமானத்தில் வந்து தேரில் நிற்கிறார். அவருக்கு பூக்கள் தூவுகின்றனர். ஆனால் மக்கள் வேலிக்கு அந்த பக்கம் இருக்கின்றனர். அவர்களின் ஸ்பரிசத்தை தொடாத ஒருவருக்கு மக்களின் வலியும் வேதனையும் எப்படி தெரியும்.

ஆனால் அவரை தெய்வமகன் என்கின்றனர். அவர் தெய்வமகன் கிடையாது சர்வாதிகாரி, ஒரு டெஸ்ட் டியூப் பேபி என கடுமையாக விமர்சித்தார். மேலும் நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் மக்களுடைய பயம்தான் சர்வாதிகாரியின் பலம்.

நாம் எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். சரியானவரை தேர்ந்தெடுத்தால் மக்கள் ஜெயிப்பார்கள். இல்லை என்றால் மக்கள் தான் தோற்றுப் போவார்கள். அதனால் சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மன்னர் வீட்டுக்கு போய் விடுவார். அதன் பிறகு எனக்கு வேலை இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் எப்போதும் எதிர்க்கட்சி ஆக இருக்க வேண்டும் என பிரகாஷ்ராஜ் மோடியை விளாசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கு சாதகமாக அமையுமா.?

Trending News