ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மீண்டும் களத்தில் குதித்த பிரசன்னா.. சொன்னதைக் கேட்டு நடுங்கும் நடிகர்கள்

சினிமாவில் நல்ல திறமை கொண்ட சில நடிகர்கள் ஒரு சில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தவறான பட தேர்ந்தெடுத்த நடித்ததால் மார்க்கெட்டில் இழந்து அதன் பிறகு வில்லன், துணை நடிகர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அவ்வாறு தமிழ் சினிமாவில் மணிரத்னம் தயாரிப்பில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அதன்பிறகு ரகசியமாய், கண்ட நால் முதல், சீனாதானா 001, நாணயம், சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அஞ்சாதே படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
அதன்பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சினேகாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பிரசன்னாவின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் வில்லன் கதாபாத்திரம், செகண்ட் ஹீரோ ரோல் ஆகியவற்றில் நடித்து வந்தார்.

இதனால் பிரசன்னாவால் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. இவர் ஒரு வருடமாக வெளியில் வராமல் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை மட்டுமே பிரசன்னா கைவசம் வைத்துள்ளார்.

பிரசன்னா வேறு படம் எதுவும் இல்லாததால் தற்போது வெப்சீரிஸ் இல் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் பல இயக்குனர்களிடம் இருந்த பிரசன்னா கதை கேட்டு வருகிறாராம். மீண்டும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி விடக்கூடாது என்று மிகுந்த கவனமாக உள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் நல்ல கதையாக இருந்தால் கொண்டு வாருங்கள், சம்பளம் கம்மியாக நடித்து தருகிறேன் என கூறியுள்ளாராம். இதனால் பிரசன்னா சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை தன்னுடைய ஹீரோ அந்தஸ்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

இதனைக் கேட்ட சில நடிகர்கள் பிரசன்னா வில்லனாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இவரை ஹீரோவாக நடித்தால் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News