வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்யின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட பிரசாந்த்.. நாலா பக்கமும் அஜித்துக்கு செக் வைக்கும் தளபதி

Vijay and Prasanth: விஜய் தற்போது ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் ஒன் மேன் ஆர்மியாக ஜெய்த்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் நிற்காமல் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ஜெட் வேகத்தில் பறக்கிறார். தற்போது லியோ படம் ரிலீஸ் ஆனதை ஒட்டி அடுத்த படமான தளபதி 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் கமிட் ஆகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் பிரசாந்த் இதில் நடிப்பதற்கு தயக்கம் காட்டிய பொழுது செகண்ட் ஹீரோ மாதிரி கேரக்டர் என்று சொல்லி அவரை ஒத்துக்க வைத்து விட்டார்கள். ஏற்கனவே விஜய் மற்றும் பிரசாந்த் நெருங்கிய நண்பர்கள் அதற்காகவும் பிரசாந்த் இதில் நடிப்பதற்கு முழு சம்மதத்தையும் கொடுத்தார். இதற்கிடையில் பிரசாந்திடம் நேரடியாக விஜய் போன் பண்ணி இப்படத்தில் நடிப்பதற்கு கூப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு பிரசாந்தும் நம்முடைய நண்பர் நம்மீது அக்கறை வைத்து இந்த வாய்ப்பை கொடுக்கிறார் என்ற நம்பிக்கையில் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் இதற்கு இடையில் விஜய்யின் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அதாவது இவர்கள் இருவரும் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் நுழைந்தவர் தான் அஜித்.

Also read: ரஜினி, விஜய்யை ஓரம்கட்ட வரும் ஹீரோ.. தந்திரமாக செய்து வரும் வேலை

அத்துடன் அஜித் மற்றும் விஜய்யை விட ஒரு படி டாப்ல இருந்தவர் பிரசாந்த். அந்த நேரத்தில் விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் சேர்ந்து அஜித்தை சற்று குறைவாகவே எடை போட்டு வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையுடன் தற்போது வளர்ந்து நிற்கிறார் அஜித். இந்த சூழ்நிலையில் அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்தை நடிக்க வைப்பதாக பேச்சுவார்த்தை அடிபட்டது.

இதை தெரிந்து கொண்ட விஜய், அஜித் இந்த மாதிரி ஒரு விஷயத்தை பண்ணினால் எல்லா நல்ல பெரும் அவருக்கு போய்விடும் என்பதினால் அவருக்கு முன் முந்தி கொண்டார். அதாவது பிரசாந்தை அஜித் கூப்பிடுவதற்கு முன் விஜய் அவருடைய 68வது படத்தில் நடிக்கும் வாய்ப்ப கொடுத்திருக்கிறார்.

அதனால் தான் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து லாக் செய்து இருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் விஜய்யின் தந்திரமான செயல் இருப்பது தற்போது தான் வெளி வருகிறது. எது எப்படியோ பிரசாந்தை பொருத்தவரை செகண்ட் இன்னிங்ஸ் ஆக ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை தக்க வைத்துக் கொண்டால் அடுத்தடுத்து வெற்றி வாய்ப்பை பெறலாம்.

Also read: ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா.? தளபதி சர்ச்சையில் சிக்க இதுதான் காரணம்

Trending News