திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இதுதான்பா ரீ-என்ட்ரி.. பாலிவுட் நடிகருடன் பட்டையை கிளப்ப போகும் பிரசாந்த்

தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தியாகராஜன் தற்போது அவர் மகன் பிரசாந்தை வைத்து அந்தகன் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் இப்படம் வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது ஆங்கில படத்தில் பிஸியாக இருக்கும் தியாகராஜன் பிரஷாந்த் நடிப்பில் உருவாகயிருக்கும் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் பிரசாந்துடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார்.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு சல்யூட் என்று தலைப்பு வைக்கப்பட இருப்பதாகவும், படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதே தலைப்பில் துல்கர் சல்மானின் படம் வெளிவந்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பட தலைப்பு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு அந்தகன் பட வெளியீட்டிற்கு முன்பு சொல்லப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அமிதாப்பச்சன், பிரசாந்துடன் நடிக்கப் போகும் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை தூண்டியுள்ளது.

சமீபகாலமாக திரையுலகில் பான் இந்தியா திரைப்படங்கள் வெளிவருவது அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகயிருக்கும் இந்த திரைப்படம் குறித்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News