வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கிடுக்கு பிடி போட்ட கரண் தாப்பர்.. ஆவேசமடைந்த பிரசாந்த் கிஷோர், விவாதமான நேர்காணல்

Prashant Kishor: நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 1ம் தேதி இது முடிவுக்கு வரும் நிலையில் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றது.

இந்நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் ஊடகவியலாளர் கரண் தாப்பர் கேட்ட கேள்வி அவரை டென்ஷன் ஆக்கி இருக்கிறது.

கடந்த சில தேர்தல்களில் உங்களின் கணிப்புகள் பொய்யாகிவிட்டது என்பதுதான் அந்த கேள்வி. கடந்த மே 2022-ல் காங்கிரஸ் கட்சி இமாச்சலில் தோல்வி பெறும் என்று நீங்கள் கணித்தீர்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என ஆதாரத்தை முன் வைத்தார்.

விவாதமான நேர்காணல்

இதனால் ஆவேசம் அடைந்த பிரசாந்த் நான் அப்படி கூறினேனா? இதற்கான வீடியோ ஆதாரம் உங்களுக்கு இருக்கிறதா? அதை காட்டுங்கள் என படபடவென பொரிந்து தள்ளி விட்டார். அதற்கு கரண் தாப்பர் நீங்கள் கூறியதை தான் எழுத்து மூலமாக செய்திகளாக வெளியிட்டுள்ளார்கள் என மடக்கினார். ஆனால் அதை முற்றிலும் மறுத்த பிரஷாந்த் அது உண்மை என்றால் அரசியலை விட்டு விலகுகிறேன்.

அப்படி இல்லை என்றால் நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் கணிப்பு

அவருடைய சோசியல் மீடியா பதிவுகளும் அதைத்தான் சொல்கிறது. தேர்தலில் ஒரு கட்சியை வெற்றி பெற வைக்க சிறப்பான திட்டங்களை இவருடைய குழு வகுத்து வருகிறது. அதில் வெற்றி கண்டதாலேயே இவர் சாமானிய மக்களுக்கும் தெரிந்த முகமாக மாறி இருக்கிறார்.

ஆனால் செல்வாக்கு இல்லாத ஒரு கட்சியை இவர் வெற்றியடைய செய்திருக்கிறாரா? என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஏனென்றால் வெற்றி எங்கையோ அங்கு தான் இவரும் இருக்கிறார். சற்று புரியும் படி சொன்னால் ஜெயிக்கப் போகும் குதிரை மேல் பந்தயம் கட்டும் கதை தான்.

இதில் இவருடைய கணிப்பு சில முறை தவறியும் இருக்கிறது. அதைத்தான் இந்த நேர்காணலில் ஊடகவியலாளர் கேள்வியாக கேட்டார் ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜக வெற்றியை உறுதி செய்து வருகிறார். ஜூன் 4 வரை இதற்காக நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

சுவாரஸ்யாமான செய்திகளுக்கு

Trending News