புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஏர் ஹோஸ்டரை ஏமாற்றிய பிரசாந்த்.. பரபரப்பை கிளப்பிய பெண் கொடுத்த புகார்

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ஏராளமான பெண் ரசிகைகளை கொண்ட இவர் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினி, கமல் வரிசையில் இவருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு இடம் இருக்கிறது.

அடுத்தடுத்த தோல்வி படங்களின் காரணமாக சில வருடங்கள் இவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அவ்வப்போது அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read:பிரசாந்தின் வாழ்க்கையை கெடுத்தது நானா.? அடப்பாவிகளா! மனம் திறந்து பேசிய தியாகராஜன்

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து ஏர்போர்ட்டில் ஊழியராக பணிபுரியும் பெண் பிரசாந்த் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் பிரசாந்த் 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை வாங்கி கொடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண்ணின் இந்த புகாருக்கு பிரசாந்த் தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

Also read:பிரசாந்தை ஏமாற்றிய குடும்பத்தினர்.. விஷயம் தெரிந்தவுடன் விவாகரத்தான சம்பவம்

அதாவது பிரசாந்தின் அப்பா தியாகராஜனின் உதவியாளர் அந்தப் பெண் வேண்டுமென்றே பிரசாந்த் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அப்பெண் பேசி இருப்பதாகவும் காவல்துறையில் பதில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த இரண்டு புகார்களையும் போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். இதுவரை எந்த சர்ச்சை மற்றும் கிசுகிசுவிலும் சிக்காத பிரசாந்த் மீது ஒரு பெண் இப்படி ஒரு புகார் அளித்திருப்பது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Also read:சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

Trending News