புன்னகை அரசி என தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா. 2000ஆம் தொடக்கத்தில் இருந்து முக்கிய நடிகையாக அப்பொழுது முன்னணியில் அனைவருடனும் இணைந்து பணிப்புரிந்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானார் என்றாலும் முதலில் நாயகியாக ஒப்பந்தமான திரைப்படம் விரும்புகிறேன். நடிகர் பிரஷாந்த் நடிப்பில் சுசி கணேசன் இயக்கியிருந்த திரைப்படம் பல்வேறு தடைகளால் 2002 ஆம் ஆண்டில் தான் வெளியானது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சினேகா சமீபத்தில் நினைவுக்கூறுகையில், விரும்புகிறேன் படம் தான் என்னுடைய முதல் படம். முதல் படத்திலேயே நடிகர் பிரஷாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. பிரஷாந்த் பார்ப்பதை போலவே, பழகுவதற்கும் மிகவும் இனிமையானவர். அது என்னுடைய முதல் படம் என்ற போதும், அவ்வளவு பெரிய நடிகர் பிரஷாந்த் என்னுடன் மிகவும் சகஜமாக பேசினார். எது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது, ஆனால் பிரஷாந்த் யூனிட்டில்லுள்ள அனைவருடனும் அப்படித்தான் பழகினார். நான் இப்போது எவ்வளவு படங்கள் நடித்திருந்தாலும் பிரஷாந்த் என்னுடைய முதல் நாயகன் என்பதால், எனக்கு எப்பொழுதும் அவரிடத்தில் மரியாதை உண்டு.
விரும்புகிறேன் திரைப்படம் வெளியீடு தடைப்பட்டாலும் படம் வெளியான பிறகு நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்கு சினேகாவிற்கு தமிழ்நாடு ஸ்டேட் பிலீம் மூலம் சிறந்த கதாநாயகி விருது கிடைத்தது. இந்த படம் மட்டுமின்றி பிரஷாந்த்-சினேகா இருவரும் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளனர்.
அதன் பின் பல் படங்களில் நடித்த சினேகா தற்போது திருமணமானப்பின் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தனுஷின் பட்டாஸ் படம் வெளியானது. சின்னத்திரையில் நடக்கும் போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.
2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகரான பிரஷாந்த் பின்னர் திரைப்படங்களில் இருந்து காணாமல் போனாலும் தற்போது அந்தகன் என்னும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.