Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தங்கலானுக்கு போட்டியாக டாப் ஸ்டாருக்கு கிடைத்த தைரியம்.. நண்பனை வைத்து பிரசாந்த் நகர்த்தும் பகடைக்காய்

தங்கலானுக்கு போட்டியாக டாப் ஸ்டாருக்கு கிடைத்த தைரியம்.. நண்பனை வைத்து பிரசாந்த் நகர்த்தும் பகடைக்காய்

Vikram: விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்திற்கு இப்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல் இப்படத்திற்காக கடந்த சில […]

Vikram: விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்திற்கு இப்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அதேபோல் இப்படத்திற்காக கடந்த சில வருடங்களாக கடுமையான உழைப்பை கொடுத்த விக்ரமுக்காகவே இப்படம் விருதுகளை வாரிக் குவிக்கும் என்ற பேச்சும் ஒரு பக்கம் இருக்கிறது. இப்படி அமர்க்களப்படுத்தும் தங்கலான் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர உள்ளது.

அன்றைய தினத்தில் ஏற்கனவே புஷ்பா 2 வெளியாக இருந்தது. ஆனால் அப்படம் தள்ளிப்போன காரணத்தால் விக்ரம் சிங்கிளாக களமிறங்க திட்டம் போட்டிருந்தார். ஆனால் அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார் டாப் ஸ்டார்.

விஜய்யை வைத்து காய் நகர்த்தும் பிரசாந்த்

ஆம் அவர் நடிப்பில் பல வருடங்களாக கிடப்பில் இருந்த அந்தகன் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அது மட்டும் இன்றி 24 ஆம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதை வெளியிடுவது வேறு யாரும் அல்ல தற்போது பிரசாந்துக்கு நெருங்கிய நண்பராக மாறி இருக்கும் விஜய் தான். கோட் படத்தில் இவருடன் பிரசாந்த் நடித்துள்ள நிலையில் அவருடைய ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் விஜய் படத்தின் பாடலை வெளியிடுவது படத்திற்கான செம பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. என்னதான் விக்ரம் பிரசாந்த் உறவினர்களாக இருந்தாலும் பெரிய அளவில் அவர்களுக்குள் நெருக்கம் இல்லை. அதனாலேயே இருவரின் படங்களும் ஒரே நாளில் போட்டி போடுவது சலசலப்பாக மாறியுள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.