தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அந்த பிரபல நடிகர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இவரது தந்தை இயக்குனர் என்பதால் தனது மகனை 17 வயதிலேயே ஹீரோவாக்கினார். அந்த சமயத்தில் விஜய், அஜித்தை விட பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
அந்த ஹீரோ வேற யாரும் இல்ல நம்ம பிரசாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான வைகாசி பொறந்தாச்சு படம் மிகப்பெரிய ஹிட்டானது. பிரசாந்த் இருந்த காலத்தில் இவர்கள் இருவரும் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் தடுமாறி வந்தனர்.பிரசாந்த் 2005ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கை நீடித்தது. கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த பிரசாந்த் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இதனால் பிரசாந்தின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதிலிருந்து பிரசாந்த் மீண்டுவர முடியாமல் தவித்து வந்தார். தற்போது பிரசாந்த் அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகாலம் தனிமையிலேயே இருந்த பிரஷாந்திற்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிரசாந்த் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி இன்னும் வெளியாகவில்லை. மேலும், கூடிய விரைவில் நிச்சயதார்த்தத்திற்கு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் இந்த ஆண்டிலேயே இரண்டாம் திருமணம் செய்து கொள்வார் எனவும் சினிமா வட்டத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி விவாகரத்துக்குப் பின்பு கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் மீண்டும் திருமணம் செய்து கொள்வது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் 48 வயதில் இவருக்கு திருமணம் தேவையா எனவும் பலர் கூறிவருகின்றனர்.