திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரசாந்துக்கு விவாகரத்து ஆகவில்லை.. பலவருட ரகசியத்தை உடைத்த தியாகராஜன்

பிரசாந்தின் சொந்த வாழ்க்கையால் அவருடைய திரை வாழ்க்கையை மிகவும் பாதித்தது. பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அப்போது பிரசாந்துக்கு பின்தான் விஜய், அஜித் எல்லாம்.

இந்நிலையில் பிரசாந்த் தனது பெற்றோர் பார்த்த கிரகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் விவகாரத்துக்கு பலகாரணங்கள் உள்ளதாக செய்திகள் உலாவியது.

ஆனால் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பிரசாந்துக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியைக் கூறினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தியாகராஜனுக்கு நன்கு தெரிந்த குடும்பம் தான் கிரகலட்சுமியின் குடும்பம்.

பிரசாந்த், கிரகலட்சுமி இருக்கும் திருமணம் ஆன பிறகு தான் கிரகலட்சுமி வேறு ஒருவரை திருமணத்திற்கு முன்பே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தது பிரசாந்த் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்த விஷயம் பிரசாந்தின் ரசிகர் ஒருவரால் தெரிய வந்தது என பிரசாந்தின் தந்தை கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கிரகலட்சுமி திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிரசாந்தின் வீட்டைவிட்டு சென்றுவிட்டாராம். பிரசாந்த் மீது கிரகலட்சுமி குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர். பிரசாந்தின் ரசிகர் கிரகலட்சுமி திருமணம் ஆனதற்கான புகைப்படம் மற்றும் ஆதாரங்களைக் கொடுத்தால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரசாந்த் காதல் திருமணம் செய்துகொண்டு இருந்தால் நன்றாக இருந்து இருப்பாரோ என்ற எண்ணம் எனக்கு இருந்ததாக தியாகராஜன் கூறினார். பிரசாந்தின் அம்மாவும் இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் விரைவில் செய்ய வேண்டும் அதுவே ஒரு தந்தையின் தலையாய கடமை என தியாகராஜன் கூறியுள்ளார். பிரஷாந்திற்கு இன்னும் பெண் பார்க்கவில்லை, இது ஒரு அரேஞ்ச் மேரேஜ் ஆக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

Trending News